
December 31, 2008
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

கிறுக்கியவன் Bala கிறுக்கிய நேரம் 1:40 PM 0 comments
Labels:Rasiganbalu,culture, வாழ்த்துக்கள்
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்-2009



கிறுக்கியவன் Bala கிறுக்கிய நேரம் 1:25 PM 0 comments
Labels:Rasiganbalu,culture, வாழ்த்துக்கள்
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.-2009


கிறுக்கியவன் Bala கிறுக்கிய நேரம் 12:03 PM 0 comments
Labels:Rasiganbalu,culture, வாழ்த்துக்கள்
நானும் என் காதலும்
இதயத்தில் வைத்திருக்கிறேன்
என்கிறாயே...
அதன் அளவு தான் உன் காதலா?"
என்று என்னை கேட்கிறாய்.
அடி என்னவளே...
என் உயிரை எடுத்து
உனக்கு அர்பணித்துவிட்டு
அதற்கு பதிலாக
என் காதலை அல்லவா
நிரப்பியிருக்கிறேன் என் இதயத்தினுள்.
அதன் மூலமாகத் தானடி
உயிரும் வாழ்கிறேன்.
இது போதாதா...
உன் மீதான என் காதலின்
அளவைச் சொல்ல...?
கிறுக்கியவன் Bala கிறுக்கிய நேரம் 11:53 AM 0 comments
December 22, 2008
நினைக்க மறந்தாலும், மறக்க முடியாது
நீ உன் காதலை
என்னிடம் சொல்ல
வெக்கப்பட்டு எழுதி தந்துவிட்டு
அசட்டு சிரிப்புடன் சென்றது
நினைவிருக்கிறதா ? நான் வீட்டில் இருக்கிறேனா
என்று
பார்த்து வரச்சொல்லி
உன் தோழியை
அனுப்பி வைப்பாயே
நினைவிருக்கிறதா ?
உனக்கு தலை பின்னிக்
கொண்டிருக்கும் அம்மா
பார்க்க முடியாது என்ற
தைரியத்தில் எதிரிலிருந்த என்னைப்
பார்த்து கண்சிமிட்டி
‘எங்கே நீ பண்ணு பார்க்கலாம்”
என்று வம்புக்கிழுத்தாயே
நினைவிருக்கிறதா ?
ஒரு திருமண மண்டபத்தில்
‘அதோ அவர்தான்”
என்று பார்வையாலேயே
தோழிகளுக்கு என்னை
அடையாளம் காட்டினாயே
நினைவிருக்கிறதா?
என் காதல் கடிதங்கள்
உன் தோழியின் பெயரில்
வருமே அந்த
கவிதைகள்
நினைவிருக்கிறதா ?
தொலைபேசியில்
நான் உன்னுடன் பேசிக்கொண்டு
இருக்கும்போது
"வேற ஒன்னும் இல்லையா "
என்று வழிவாயே
நினைவிருக்கிறதா ?

போதெல்லாம்
‘ஏண்டி இப்படி ஊருக்கே கேக்குறமாதிரி கத்தற”
என்று உன் அம்மா திட்டுவாங்களே
நினைவிருக்கிறதா ?

அருகருகே அமர்ந்து
பேசிக்கொண்டு இருந்த
அந்த பெரிய கரவீடு
நினைவிருக்கிறதா ?

நாளிதழ் வந்ததும்
உனக்கு நானும்
எனக்கு நீயும்
ராசி பலன்கள்
பார்ப்போமே
நினைவிருக்கிறதா?
தனிமையில் படிக்கிறேன்
என்று சொல்லி
உன் பார்வைக்காக
மொட்டைமாடிக்கு
வருவேனே
நினைவுக்கிறதா ? அடுத்து இவளுக்குத்தான்
கல்யாணம்
என்று சொன்னதும்
ஏனோ என்னை கள்ளத்தனமாக
பார்த்தாயே ஒரு பார்வை
நினைவிருக்கிறதா ?
நினைக்க மறந்தாலும், மறக்க முடியாது
கிறுக்கியவன் Bala கிறுக்கிய நேரம் 11:57 PM 1 comments
நினைக்க மறந்தாலும், மறக்க முடியாது
கிறுக்கியவன் Bala கிறுக்கிய நேரம் 9:09 PM 0 comments
2009 ஆம் வருடத்திற்கான நிறம்
இந்த செய்தியை தந்த புதுகை தென்றலுக்கு நெஞ்சார்ந்த நன்றி!!!
கிறுக்கியவன் Bala கிறுக்கிய நேரம் 7:22 AM 0 comments
Labels:Rasiganbalu,culture, தெரிந்து கொள்வோம்
December 21, 2008
அமைதியாக இரு ! பொறுமையாக இரு ! அன்புடன் இரு !
இது மிக கடினமானது என்று எனது உள்ளுனர்விற்கு தெரியும்.அன்பற்ற எண்ணங்கள் தோன்றுவதற்கு காரணமாக பல விதமான இடங்கள்,சூழ்நிலைகள்,மனிதர்கள்,அமைய வாய்ப்புகள் அதிகம் உண்டு.இருப்பினும் அன்பே உயர்ந்தது என்று என் மனதிற்கு இயன்ற அளவு உணர்த்தி அதனை கடைபிடிக்க முயலுவேன்.
கிறுக்கியவன் Bala கிறுக்கிய நேரம் 4:32 PM 0 comments
Labels:Rasiganbalu,culture, ஆன்மீகம், தெரிந்து கொள்வோம்
December 17, 2008
புகைப்படம் இடம் பெற வேண்டுமா?
அமுதம்தமிழ் இணைய தளத்தில் உங்கள் குழந்தைகளின் புகைப்படம் இடம் பெற வேண்டுமா? உங்கள் செல்லக் குழந்தைகளின் புகைப்படங்களை எங்களுக்கு அனுப்பிதாருங்கள். புகைப்படங்கள் முகப்பு பக்கத்தில் இடது மேல் பாகத்தில் இருபது நாட்களுக்கு இடம் பெறும்.
அனுப்ப: contact@amudamtamil.com
பார்க்க: அமுதம்தமிழ் இணைய தளம் http://www.amudamtamil.com/மின்னஞ்சல் வழியாக வந்த செய்தி
கிறுக்கியவன் Bala கிறுக்கிய நேரம் 3:05 AM 0 comments
Labels:Rasiganbalu,culture, தெரிந்து கொள்வோம், வாழ்த்துக்கள், விளம்பரங்கள்
December 15, 2008
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
கிறுக்கியவன் Bala கிறுக்கிய நேரம் 2:11 AM 1 comments
Labels:Rasiganbalu,culture, வாழ்த்துக்கள்