AddThis

Bookmark and Share

May 11, 2009

இதழில் கதை எழுதும் நேரமிது

எனக்கு பிடித்த பாடலில் ஒன்று.......

airtel
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ரவி, ராகினி ரெண்டு பேரும் இதழில் கதை எழுதும் என தொடங்கும் பாடலை பாடியதை நான் இங்கு சொல்லியே ஆகா வேண்டும்

http://www.youtube.com/watch?v=0VpaTeUteHs&feature=related

இந்த பாடலின் வரிகள் இதோ உங்கள் முன்னாள்....


இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது ஆஆஆஆஆஆஆஆஆ
மனதில் சுகம் மலரும் மாலையிது

இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இருகரம் துடிக்குது
தனிமையில் நெருங்கிட இனிமையும் பிறக்குது

இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது

காதல் கிளிகள் ரெண்டு ஜாடைப் பேசக் கண்டு
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும் போது
நீரோடை போலே என் நெஞ்சம் இனிக்கும்
இனிய பருவமுள்ள இளங்குயிலே
இனிய பருவமுள்ள இளங்குயிலே

ஏன் இன்னும் தாமதம்
மன்மதக் காவியம் என்னுடன் எழுது

நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
ஏங்கி தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
ஏக்கம் தணிந்திட ஒரு முறை தழுவடி
காலம் வரும் வரை பொருத்திருந்தால்
கன்னி இவள் மலர் கரம் தழுவிடுமே
காலம் என்றைக்கு கனிந்திடுமோ
காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ
மாலை மணமாலை இடும் வேளைதனில்
தேகம் இது விருந்துகள் படைத்திடும்
இதழில் கதை எழுதும் நேரமிது

தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே
பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த
மேகம்தனில் ஏது நீ சொல்வாய் கண்ணே
அழகைச் சுமந்து வரும் அழகரசி
அழகைச் சுமந்து வரும் அழகரசி

ஆனந்தப் பூ முகம்
அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ

நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது
மங்கை உன் பதில் மனதினைக் கவருது
மாறன் கணை வந்து மார்பினில் பாயுது

காமன் கணைகளைத் தடுத்திடவே
காதல் மயில் துணையென வருகிறது
மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகமெனும் நெருப்பினைப் பொழிகிறது
மோகம் நெருப்பானால் அதைத் தீர்க்கும்
ஒரு ஜீவநதி அருகினில் இருக்குது

இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது ஆஆஆஆஆஆஆஆஆ
மனதில் சுகம் மலரும் மாலையிது

காதல் வயப்பட்டவள் காதலனுக்காக காத்து இருப்பதில் என்னதான் சுகமோ

காதல் வயப்பட்டவள் காதலனுக்காக காத்து இருப்பதில் என்னதான் சுகமோ ......
May 06, 2009

காபி - சிங்கிள் டீ நல்லதா - கெட்டதா?
காபி - சிங்கிள் டீ - ஏதாவது ஒன்று இல்லாமல் பெரும்பாலோருக்கு நேரம் நகராது; இருந்த இடத்தை விட்டு நகரவும் பிடிக்காது. அந்த அளவுக்கு இரண்டு பானங்களும் இந்தியர்களுடன் ஒட்டிவிட்டது. அதிலும், டீ குடிப்பவர்கள் கூட, காலையில் எழுந்ததும் காபி குடிக்க விரும்புவோர் அதிகம். காரணம், அதை சாப்பிட்டால் தான் ஏதோ உடலில் புத்துணர்ச்சி ஏற்பட்டது போல உணர்கின்றனர். தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் தான் டிகாஷன் காபி குடிக்கும் பழக்கம் பல ஆண்டாக இருக்கிறது. அதிலும், தமிழ்நாட்டில் தான் காபி குடிப்போர் அதிகம்.சமீப காலங்களில், பல மாநிலங்களிலும் மாடர்ன் காபி கடைகள் பெருக ஆரம்பித்து, காபி மோகம், இளைய தலைமுறையினரிடம் அதிகமாக காணப் படுகிறது.


நல்லதா - கெட்டதா?


காபி, உடலுக்கு நல்லதா கெட்டதா? - இந்த கேள்விக்கு இன்னும் சரியான பதில் கிடைக்கவில்லை. ஆனால், கெட்டது என்பதற்கான 100 சதவீத மருத்துவ ஆதாரங்களும் இல்லை. காபி குடித்தால் ரத்த அழுத்தம் வரும்; சர்க்கரை வியாதி ஏற்படும்; கால்சியம் போய், மூட்டு வலி ஏற்படும்... இப்படி பல பீதிகளை இன்னமும் கூட சொல்லித்தான் வருகின்றனர்.ஆனால், காபி கெட்டதல்ல என்பது மட்டும் இதுநாள் வரை ஆயிரக்கணக்கான சர்வதேச ஆராய்ச்சிகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.


டி - ஹைட்ரேஷன்


காபி குடித்தால், உடலில் நீர் வற்றிப் போய்விடும். இது தான் "டி- ஹைட்ரேஷன்' என்பது. தலைசுற்றல், மயக்கம் ஏற்படும் என்று சொல்வர். ஆனால், அது உண்மையில்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.காபி 550 மில்லி குடித்தால், அதிக அளவு சிறுநீர் போவதில்லை. அதே சமயம், அதை விட குறைவான குளிர்பானம் குடித்தால், அதிக சிறுநீர் போகிறது என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.


இதய பாதிப்பா ?


இதய பாதிப்பு உள்ளவர்கள், காபியை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர்கள் சொல்வதுண்டு. காபியில் உள்ள காபின் சத்து, இதய பாதிப்பை அதிகப் படுத்தும் என்பது அவர்கள் கருத்து. ஆனால், ஒரு நாளைக்கு மூன்று கப் காபி குடித்தவர்களுக்கு, மற்றவர்களை விட, இருதய பாதிப்பு 25 சதவீதம் குறைவாகவே உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.காபி மூலம், ஆரம்பத்தில் லேசான ரத்த அழுத்தம் ஏற்படும். ஆனால், அது நீடிப்பதில்லை. கோலாக்களில் உள்ள பாதிப்பை விட, காபியில் வெகு குறைவு என்கின்றனர் நிபுணர்கள்.


கேன்சர் வருமா ?


காபி குடித்தால், கணையம் மற்றும் சிறுநீரக புற்றுநோய் வரும் என்று சொல்லி வருகின்றனர். அதுவும் பொய் என்று, அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட பல ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உண்மையில் காபி குடித்தால், கல்லீரல் புற்றுநோய் வரும் வாய்ப்பு பாதியாக குறைகிறது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.


எலும்பு தேய்மானமா ?


காபியில், காபின் என்ற நச்சுப்பொருள் உள்ளது. காபி குடிப்பதால், அதில் உள்ள காபின் சத்து, உடலில் உள்ள கால்சியம் சத்து அறவே மறைந்து போகிறது. கால்சியம் சத்து இல்லாததால், எலும்புகளுக்கு திடத்தன்மை குறைகிறது. எலும்பு முறிவும், மூட்டு பாதிப்பும் ஏற்படுகிறது என்று சொல்வதுண்டு.காபியில் உள்ள காபின் மூலம் கால்சியம் குறையலாம்; ஆனால், காபியில் கலந்து குடிக்கும் பாலின் மூலம், உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கிறது என்பதே உண்மை.


எடை சரிகிறதா?


காபியில் உள்ள காபின் மூலம், ஒரு நாளைக்கு 75 முதல் 100 கலோரி வரை எரிக்கப் படுகிறது; ஒரு நாளைக்கு நான்கு கப் காபி குடித்தால், உடலின் எடை அதிகமாக குறையும் என்று கருத்து உள்ளது. ஆனால், சர்வதேச அளவில் மேற் கொள்ளப்பட்ட 500 க்கும் மேற்பட்ட ஆய்வுகளில், இதுவும் உண்மையல்ல என்று தெரியவந்துள்ளது.உண்மையில் காபி குடித்தால், அதில் உள்ள காபின் மூலம் உடல் எடை அதிகரிக்கவே செய்கிறது; குறையவில்லை என்று இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


மூட் வருதில்ல!


காபி குடித்தால், உடலுக்கு கெடுதல் இல்லை என்பது பெரும் பாலான ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள் ளது. ஆனால், நல்லதா என்று சொல்ல முடியுமா? நாம் சாப்பிடும் பல பொருட்களில், நல்லதை விட, கெட்டதில்லை என்பது உறுதி செய்யப் பட்டுள்ளன. அப்படித்தான் காபியும் என்கின்றனர் நிபுணர்கள்."உடலில் புத்துணர்ச்சி ஏற்படவும், சுறுசுறுப்பு அதிகரிக்கவும் காபியை விட சிறந்த பானமில்லை' என்று சர்வதேச புகழ் ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவ ஆராய்ச்சிகழக நிபுணர்கள் கூறுகின்றனர்.


குடிங்க... குடிங்க!


காபி குடித்தால், மூளை சுறுசுறுப்படையும்; நன்றாக படிக்கலாம்; மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற முடியும். இரவில், தூங்காமல் இருக்க காபியை குடிப்பது பலரிடம் வழக்கமாக உள்ளது.இதுவரை, சர்க்கரை வியாதி வராமல் இருப்பவர் களை கணக்கெடுத்தால், அவர்கள் காபி குடிப்பவர் களாகத்தான் இருப்பர். அதுபோல, காபியால் கிடைத்த நன்மை என்றால், பர்கின்சன்ஸ் நோய் வரும் வாய்ப்பை 30 சதவீதம் குறைக்கிறதாம்.


நீங்க காபி குடிப்பவரா? தினமும் நான்கு வேளையாவது குடிப்பீர்களா? பத்தாண்டுக்கு மேல் குடிப்பவர், குழந்தைப்பருவத்தில் இருந்தே குடிப்பவர் என்றால், தாராளமாக குடியுங்கள். கவலையே படாதீர்கள். உங்களுக்கு ஒன்றும் வராது. டாக்டர் சொன்னாலொழிய நிறுத்த வேண்டாமே!........