தூய அன்பைத்தவிர மாற்ற எண்ணங்கள் மனதில் தோன்றாமல் இருக்க என்னாலான முழு முயற்சியையும் மேற்கொள்வேன்.
இது மிக கடினமானது என்று எனது உள்ளுனர்விற்கு தெரியும்.அன்பற்ற எண்ணங்கள் தோன்றுவதற்கு காரணமாக பல விதமான இடங்கள்,சூழ்நிலைகள்,மனிதர்கள்,அமைய வாய்ப்புகள் அதிகம் உண்டு.இருப்பினும் அன்பே உயர்ந்தது என்று என் மனதிற்கு இயன்ற அளவு உணர்த்தி அதனை கடைபிடிக்க முயலுவேன்.
எல்லா புலன்களும் உறுதியாக நிலை நிறுத்தப்பட்டு சுருதி லயத்துடன் ஒன்றோடுஒன்று இணைந்து செயல்புரிவதவர்க்கு ஏற்றவாறு நான் அமைதியாக என்னுள்ளேயே ஆழ்ந்து சிந்திக்கும் இயல்பு உடையவனாக இருப்பேன்.
என்னிடம் கோபம், பொறுமையின்மை,மற்றும் எரிச்சல் ஏற்படும்படி யாரவது நடந்து கொண்டால்,அவர்களின் நிலையற்ற தன்மையை நினைத்து ரீங்காரம்
செய்யும் இந்த வரிகள்....
என்பதை நினைவில் கொண்டு அமைதியவேன்.
ஆக்கப்பூர்வமான, உற்சாகமளிக்கின்ற வார்த்தைகளை பேசமுடியவில்லை எனில் எதையும் பேசாமல் இருப்பேன்.
இறைவனுடைய தீர்ப்பில் எந்தத்தவறும் நடக்க வாய்ப்பில்லை.எனவே குறைகூறாமல் இருக்க முயற்சி செய்வேன்.
கஷ்டங்கள், தோல்விகள்,அபாயங்கள்ஆகியவற்றை எதிர்கொள்ள நேரும்போது தன்னமிக்கை,மனதில் உறுதி, எதிர்கொள்ளும் சக்தி, ஆகியவை என்னுள் இருக்க பிரார்த்திப்பேன்.
அன்புக்கு மட்டுமே கட்டுப்படுவேன் !!!!!!
0 comments:
Post a Comment