மனதில் எழுகின்ற ஒவ்வொரு விருப்பமும் மலராத ஒரு பிரார்த்தனை.
ஆசை, தேவை, விருப்பம் இல்லாத மனிதனே இல்லை.
ஆனால் அந்த விருப்பங்களும் ஆசைகளும் தேவைகளும் இறைவனிடம் சமர்பிக்கப்படுவதுதான் பிரார்த்தனை.
அப்படியானால் தெய்வ சன்னதியில் நின்றுகொண்டு எனக்கு அது வேண்டும் , இது வேண்டும் என்று சொல்லி விட்டால் உடனே அது பிரார்த்தனை ஆகி விடுமா ? அது நிறைவேறிவிடுமா ?
உதரணமாக............ காலையில் வயலுக்கு செல்கின்ற உழவன் மரத்தடி விநாயகரிடம் நல்ல மழை பெய்ய வேண்டும் ,இல்லாவிட்டால் நானும் என் குடும்பமும் பட்டினி என்று வேண்டுகிறான்.
சிறுது நேரத்திற்கு பிறகு ஒரு பாடகன் அங்கு வந்து நீண்ட நாட்களுக்கு பிறகு இன்றுதான் எனக்கு ஒரு கச்சேரி வாய்ப்பு கிடைத்திருக்கிறது ,இன்று மட்டும் மழை பெய்யாமல் பார்த்துகொண்டால் நல்லது என்று மண்டாடுகிறான்.
இவற்றுள் ஒருவரின் பிரார்த்தனை நிறைவேறினால் மற்றொருவரின் பாடு திண்டாட்டம் தான்.எனவே நமது பிரார்த்தனையில் முன்வினை பலன் கலந்துஇருக்கிறது அதை பொறுத்தே இந்த பிரார்த்தனைகள் நிறைவேறுகிறது .
நல்லதே செய்வோம் அதனுடன் பிரார்த்தனையும் செய்வோம் ,பிரகசமுடன் இருப்போம்.
கடந்த வருடம் மறக்கமுடியாத வருடம் ,எத்தனை இன்னல்கள், எத்தனை கொடுமைகள் ,பெரும் பொருளாதார சரிவு ,எண்ணிலடங்கா வேலை இழப்பு,.... என அடுக்கிகொண்டே போகலாம் , சரி விடுங்க போனது போகட்டும்,..
நல்லதே நினைப்போம்,
நல்லதே செய்வோம்.
நல்லதே நடக்கும்.. .
எனது குடும்பத்தார்கள், உறவினர்கள் , நண்பர்கள், மற்றும் அனைத்து நாட்டு மக்களுக்கும், எனது பிரியமுள்ள இயற்கைக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்களை என் வலை பூ மூலம் தெரிவித்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.நன்றி,.....
0 comments:
Post a Comment