பிரிவையும் நேசிக்கிறேன்
-----------------------------------------------
தனிமையில் இருந்தால் சந்தோசமாக
இருக்கலாம் என்பார்கள் சிலர்..
ஒருபோதும்
ஏற்றுக்கொள்ளமுடியாது என்னால்.
----------------------------------------------
சொல்ல நினைக்கின்றேன்
சொல்ல நினைத்தாலும்
கேட்பதற்கு யாருமில்லாமல்
புதைந்து கொள்ளும்
என் சோக வரிகள் இதோ..
---------------------------------------------
டிக் டிக் என்று
ஓயாமல்
ஓடிக்கொண்டே இருக்கும்
என் வீட்டு சுவர்கடிகரம்
அறையின்
ஓய்வில்லா மின்விசிறி எழுப்பும் சத்தில்
ஒரு அதியசியத்தை கண்டேன் ....
கண்டது கனவுதான்
----------------------------------
கண்ணாடி
எதிரில் நிற்கும் பிம்பத்தை
மட்டுமே காட்டும்
என்று யார் சொன்னது?
என் வீட்டு கண்ணாடி முன்
நான் நின்றால் அது
உன்னை காட்டுகிறதே
---------------------------------
இப்போதெல்லாம்
பார்க்கவே முடிவதில்லை
என்றாலும்..
கண்மூடி திறக்கும்
நேரத்திற்குள் உன் பிம்பங்களை
கண்ணாடி போல
தெளிவாக கட்டிவிடுகிறது
என் காதல்.
--------------------------------------
----------------------------------------
இன்னும்
எத்தனை நாட்களுக்குத்தான்
நான் எனது கைபேசிக்கு
நானே
முத்தம் கொடுத்துக்கொண்டு
இருப்பேனோ...
---------------------------------------
உனக்கும் எனக்கும் இடையே
இருக்கும்
பல ஆயிரக்கணக்கான
கிலோமீடர் தூர இடைவெளி
சட்டென்று குறைகிறது
தொலைபேசியில்
நீ தந்த முத்தத்தால்...
---------------------------------------
உன்
ஒவ்வொரு முதத்திர்க்கும்
ஒரு முத்து தராலாம்
தந்திருந்தால்
இந்நேரம் உன் வீடே
நிறைந்துருக்கும்
ஆனால்
என் உயிர் தொட்ட
அந்த முத்தத்திற்கு
என்ன தரலாம்...
-----------------------------------------
நட்பு
14 years ago
1 comments:
mappu ennada ivalavu periya kavingana nee? ithu unathu thanna ?
anyhowe this lirics are breezing the heart
again & agai hand's of you
with love
ur mama
Post a Comment