மறக்கமுடியாத நாட்கள் எத்தனை...
புளியமரத்தடியில்
புத்தகத்தை படிக்காமல்
அவள் புன்னகை பேசுவதையும்
அவள் கண்கள் பேசுவதையும்
கண் சிமிட்டாமல்
முட்டி மோதி படித்த நாட்கள் எத்தனை
அந்த
மறக்கமுடியாத நாட்கள் எத்தனை.....
-------------------------------------------------
வருகை பதிவேட்டில்
அடுத்தக்டுது
பெயர்கள் அமைந்து இருக்க
எல்லோரும் வரிசையாய்
ப்ரெசென்ட் சார் என்று
சொல்லிக்கொண்டுவர
அவள் பார்ப்பதற்காகவே
ப்ரெசென்ட் சார் என்று
சொல்லாமல்
இருந்த நாட்கள் எத்தனை
அந்த
மறக்கமுடியாத நாட்கள் எத்தனை...
------------------------------------------------
எதாவது பேசலாம்
என்று
அருகில் செல்லும்போது
எதுவும் பேசாமல்
மெதுவாக
நகர்ந்த நாட்கள் எத்தனை
அந்த
மறக்கமுடியாத நாட்கள் எத்தனை..
------------------------------------------------
நட்பு
14 years ago
0 comments:
Post a Comment