AddThis

Bookmark and Share

February 26, 2009

காதல் இதுதானோ
























உன்னை முதல் முறை பார்த்ததும் பிடித்ததே
அன்று வியந்தேன் இது தான் காதலா என்று !!


நம் கண்கள் என்று சந்தித்ததோ
அன்று வியந்தேன் இது தான் காதலா என்று !!


நாம் கைகோர்த்து நடக்கையில்
வியந்தேன் இது தான் காதலா என்று !!


நம் மெளனங்கள் பேசியதை
கண்டு வியந்தேன் இது தான் காதலா என்று !!

இருவரும் மற்றவர் தவறுகளை மறக்கையில்
வியந்தேன் இது தான் காதலா என்று !!


உன்னை கடிந்து பேசியபின்
நான் அழுகையில் வியந்தேன் இது தான் காதலா என்று !!


புன்னகையில் என் சோகங்களை மறக்கையில்
வியந்தேன் இது தான் காதலா என்று !!


என் சுமைகளை நீ சுமப்பதை கண்டு
வியந்தேன் இது தான் காதலா என்று !!

என் கண்ணீருக்கு தோள் கொடுக்கையில் வியந்தேன் இது தான் காதலா என்று !!


நிமிடமும் உன் நினைவுகள் என்னை ஆட்கொள்கையில்
வியந்தேன் இது தான் காதலா என்று !!


உன்னை பிறிந்த போதும் நீ என்னுள் இருக்கையில்
வியந்தேன் இது தான் காதலா என்று !!


இன்று உன் மடியில் குழந்தையென மாறியதும்
உணர்ந்தேன் இது தான் காதல் என்று !!



0 comments: