AddThis

Bookmark and Share

January 14, 2011

இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கருணாநிதி

We know it better but a revision by his own words… if u have time don’t miss it….

 [karunanithi-election.jpg]

தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கருணாநிதி

கருணாநிதியின் தனக்கு தானே எழுதிக் கொண்ட நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் பக்கம் 80 ல் கூறியிருப்பதை பார்க்கலாம். 

*1944 
ம் ஆண்டு எனக்கும்பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற்றது. ஓராண்டு காலம் வரையில் வாழ்க்கையின் சுவைபடலம் பேரானந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை.

 இதனால்மனஅமைதி குறைய தலைப்பட்டது. இப்படியே வேலை இல்லாமல் திரிந்து கொண்டிருந்தால்வாழும் காலம் எப்படி போய் முடிவதுஎன்ற கேள்விகள் எல்லா பக்கங்களிலிருந்தும் கிளம்பின. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வேலை தேடி அலைந்தேன். வாழ்வதற்கு என்ன வழி என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினேன். அதன் விளைவு நாடக நடிகனாக ஆனேன்.
இவ்வாறு தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார் கருணாநிதி.

பக்கம் 81,82 ல்..............
*விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். அங்கு அறைகுறையாக உணவு கிடைக்கும். குளிப்பது என்பது அங்கு மிகவும் பெரிய பிரச்சனை. நாங்கள் குடியிருந்த இடத்திலிருந்து குளிக்க வேண்டுமென்றால், 1 கிமீட்டர் தூரமாவது செல்ல வேண்டும். வயலுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் இடங்களில் தான் எங்களது குளியல். அந்த குழாய் தான் எங்களுக்கு குற்றால அருவி. குடிநீர் எல்லாம். குளித்து விட்டு வீட்டுக்கு கிளம்புவோம். கடுமையான வெயில் கொளுத்தும். சிறிய துண்டை இடையில் கட்டிக் கொண்டுதுவைத்த சட்டையை தோளில் உலரப் போட்டுக் கொண்டு சவுக்கார சோப்பினால் வெண்மையாக மாற்றப்பட்ட வேட்டியைஇரு கைகளாலும் தலைக்கு மேலே குடை போல பிடித்துக் கொண்டு அதனை உலர வைத்தவாறு வீட்டிற்கு வந்து உலர்ந்த பின் அவற்றை அணிந்து கொண்டு பிற்பகல் உணவிற்கு தவமிருப்போம்.

இதற்கடுத்து, 92,93 ம் பக்கங்களில்................
பெரியாரின் ஈரோட்டு குடியரசு பத்திரிகை அலுவலகத்தில் துணை ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாதம் சம்பளம் 40 ரூபாய். அதிலும் பிற்பகலும்இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய் பிடித்துக் கொள்வார்கள். காலைமாலை சிற்றுண்டிக்காக மாதம் 10ரூபாய் போய் விடும். எனது இதர செலவுகள் ஐந்து ரூபாய். மீதம் ரூபாயை தான் என்னை நம்பி அண்டி வந்த அருமை மனைவி பதமாவதிக்கு மாதந்தோறும் திருவாரூக்கு மணியார்டர் செய்வேன். 

பக்கம் 92,93 ல்..............................
பெரிய அளவில் வைத்திய உதவிகளை எனது தந்தையாருக்கு செய்ய வசதியான நிலையில் குடும்பம் இல்லை. என் தந்தை இறந்து விட்டார். 

இப்படி கருணாநிதி எழுதிவைத்துள்ளார்.
இன்றைக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

1.கருணாநிதியின் கோபாலபுரம் வீடு
2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்
3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு
4. முரசொலி செல்வம்செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்கப்பட்டது)
5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம்
6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்
7. அமிர்தம் வீடு- கோபாலபுரம்
8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்
9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு
10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி
11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்
12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)
13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)
14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)
15. தயாநிதி மாறன் வீடு
16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணாஅமைந்தகரை
17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு
18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்
19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை
20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில்
21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை
22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்
23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32 கிரவுண்ட் நிலம்
25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி
26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்குசிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக
27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது
28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை
29. அந்தமான் தீவின் நிலங்கள்
30.அஸ்ஸாம் மாநிலத்தில் டீகாபி தோட்டங்கள்
31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு
32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை
33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்
34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது
35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு
36. கேரளாவில் மாமன்மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பிமற்றும் ரப்பர் தோட்டங்கள்
37. செல்வம் வீடு
38. முக.ஸ்டாலின் சொத்துக்கள்
39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர்காட்டூர்திருகுவளை.
40.முக.அழகிரி- மதுரைதிண்டுக்கல்கொடைக்கானல்மேலூர் சொத்துக்கள்மதுரை நகரின் வீடியே பார்லர்கள்கடைகள்ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள்
41. செல்வம் வீடு-பெங்களுர்
42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர்
43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை
44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ்இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ் சாலை.
45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள்
46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர்ஜி.என்.செட்டி சாலைசென்னை.
47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம்மயிலாடுதுறைதிருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள். 
49 .additional properties  after semmuzi   coimbatore farm house
50. broke bond land in coimbatore (given to rental for RMKV silks)
extra extra extra  extra  

இங்கு அழகிரிகனிமொழியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.
திருவாரூரில் இருந்து கட்டிய வேட்டியும்தோளில் போட்ட துண்டுடன் சென்னை நகருக்கு கள்ள ரயில் ஏறிவந்த கருணாநிதி குடும்பம் இன்று இந்திய பணக்காரர்கள் பட்டியலில்.

வாழ்க தமிழ்நாடு. வாழ்க வந்தாரை வாழழழழழழ வைக்கும் தமிழ்மக்கள்

( இந்த செய்தி மின்னஞ்சல் மூலமாக எனக்கு வந்தது.)

0 comments: