என்ன சொல்லி புரிய வைப்பேன்
என் மனதை
உன்னையே நினைத்து கொண்டுஇருக்கிறது...
என்ன சொல்லி புரிய வைப்பேன்
என் கண்களை
உன்னையே பார்த்து கொண்டுஇருக்க வேண்டுமென்று அடம்பிடிக்கிறது...
என்ன சொல்லி புரிய வைப்பேன்
என் கைகளை
உன் புகைப்படத்தை எடுத்த பிறகு உள்ளே வைக்க மறுக்கிறது....
என்ன சொல்லி புரிய வைப்பேன்
என் உயிரை
நீ இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ மறுக்கிறது...
என்ன சொல்லி புரிய வைப்பேன்
என்னை....
நீ அனுப்பும் அந்த காதல் கடிதங்கள் மட்டுமே எனக்கு ஆறுதல்.....
மேலே உள்ள படத்துக்கு நன்றி : GOOGLE IMAGES
1 comments:
இது புகைப்படத்திற்கு ஏற்ற அருமையான, அழகான கவிதை
Post a Comment