March 11, 2021
திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்
கிறுக்கியவன் பூவந்தி கிறுக்கிய நேரம் 4:04 AM 0 comments
சிவனுக்கு ஏன் வில்வம் இலை
கிறுக்கியவன் பூவந்தி கிறுக்கிய நேரம் 3:58 AM 0 comments
Labels:Rasiganbalu,culture, சிவன், வில்வம் இலை
March 10, 2021
விளக்கேற்றியவுடன் செய்ய கூடாதவை
கிறுக்கியவன் பூவந்தி கிறுக்கிய நேரம் 3:22 AM 0 comments
Labels:Rasiganbalu,culture, விளக்கேற்றியவுடன் செய்ய கூடாதவை
இறைவழிபாட்டில் பசுவுக்கும், பாம்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்??
கிறுக்கியவன் பூவந்தி கிறுக்கிய நேரம் 3:15 AM 0 comments
Labels:Rasiganbalu,culture, அதிக முக்கியத்துவம், இறைவழிபாட்டில் பசுவுக்கும், ஏன், பாம்புக்கும்
தஞ்சாவூர் பெரிய கோவில் பற்றி கிடைக்கப் பெற்ற செய்தி
கிறுக்கியவன் பூவந்தி கிறுக்கிய நேரம் 3:07 AM 0 comments
Labels:Rasiganbalu,culture, செய்தி, தஞ்சாவூர், பெரிய கோவில்
March 09, 2021
ஆன்மீகம் அறிவோம் _கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை!
கிறுக்கியவன் பூவந்தி கிறுக்கிய நேரம் 8:28 AM 0 comments
Labels:Rasiganbalu,culture, ஆன்மிக சிந்தனை, தீபம் ஏற்றும் முறை, விளக்கு, விளக்கை குளிர வைக்கும் முறை
January 15, 2011
தெரிந்து கொள்வோம்
1.மற்றவர்கள் துன்பத்தை அறிந்து கொள்.உன் துன்பம் அர்த்தமற்றதாகி விடும்.
2.எத்தனையோ துன்பங்களையும், சின்னச் சின்ன அவமானங்களையும் தான்டித் தான் உயரமுடியும்.
3.நண்பனாக நடிப்பவனை விட நேரடி எதிரி மேலானவன்.
4.இன்பத்திற்காக மனிதன் பல துன்பங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.
5.எத்தனை நாட்கள் வாழ்ந்தாய் என்பது பெரிதல்ல, வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்திருக்கிறாய் என்பதே பெரிது.
6.உனது முயற்ச்சிக்கு பயிற்ச்சியை உணவிடு, புரட்சிகள் பூக்களாய் மலரும்.
7.அறிவாளிகளின் வார்த்தைகளைவிட அனுபவசாலிகளின் வார்த்தை உன்னதமாய் இருக்கும்
8.அகங்காரம் அறிவை வளர்க்காது.
________________
உண்மக்காக எதையும் துறக்கலாம். ஆனால், எதன் பொருட்டும், உண்மையைத் துறக்கலாகாது
NET la padichathu.......
கிறுக்கியவன் பூவந்தி கிறுக்கிய நேரம் 9:58 PM 0 comments
Labels:Rasiganbalu,culture, தெரிந்து கொள்வோம், படித்ததில் பிடித்தது
நீ எதை அதிகம் விரும்பினாய்?
நீ எதை அதிகம் விரும்பினாய்?
ஓர் இளைஞன் சாக்ரடீஸிடம் வந்து வெற்றிக்கான இரகசியத்தைப் பற்றிக் கேட்டான். அதற்கு சாக்ரடீஸ் மறுநாள் காலை ஆற்றங்கரைக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். மறுநாள் காலை ஆற்றங்கரையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.
சாக்ரடீஸ் அந்த இளைஞனை ஆற்றை நோக்கி உள்ளே வரும்படி கேட்டுக் கொண்டார். கழுத்தளவு நீர் வரை உள்ளே வந்தவுடன் அந்த இளைஞனை நீரினுள் வைத்து அமுக்கினார். அவன் வெளியே வர முயற்சி செய்தான். ஆனாலும் அவனை அப்படியே அமுக்கியவாறு அவனது முகம் நீல நிறமாக மாறும் வரை வைத்திருந்தார். சற்றுப் பொறுத்து அவனது தலையை நீரினுள்ளிருந்து வெளியே இழுத்தவுடன் அந்த இளைஞன் செய்த முதல் வேலையே தன்னால் இயன்ற அளவு காற்றை மீண்டும் மீண்டும் உள்ளிழுத்தான்.
சாக்ரடீஸ் அவனிடம் “நீ நீருக்குள் இருந்த போது நீ எதை அதிகம் விரும்பினாய்?” என்று கேட்டார். அந்த இளைஞன் “காற்று” என்று பதிலளித்தான். சாக்ரடீஸ், “வெற்றியின் இரகசியமே அது தான் .நீ எவ்வளவு அதிகமாக காற்றை விரும்பினாயோ அது போன்றே வெற்றியையும் விரும்பினால் உனக்கு அது கிட்டும்” என்று சொன்னார்.
இதைத் தவிர வேறு எந்த ரகசியமும் இல்லை. “ஒரு சுட்டெரிக்கும் ஆசையே சாதனைகளின் தொடக்கமாகும். ஒரு சிறிய தீயால் எப்படி அதிக வெப்பத்தை தர முடியாதோ, அது போல ஒரு பலவீனமான ஆசையால் மிகப்பெரிய வெற்றியை உருவாக்க முடியாது”
கிறுக்கியவன் பூவந்தி கிறுக்கிய நேரம் 9:49 PM 0 comments
Labels:Rasiganbalu,culture, ஆன்மீகம், எனக்கு பிடித்தது, தெரிந்து கொள்வோம்
January 14, 2011
இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கருணாநிதி
![[karunanithi-election.jpg]](http://1.bp.blogspot.com/_lFwfn4LXu4I/RmegrVzSvdI/AAAAAAAAAIk/GO7-Ztaqdt4/s1600-rw/karunanithi-election.jpg)
தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கருணாநிதிகருணாநிதியின் தனக்கு தானே எழுதிக் கொண்ட நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் பக்கம் 80 ல் கூறியிருப்பதை பார்க்கலாம். *1944 ம் ஆண்டு எனக்கும், பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற்றது. ஓராண்டு காலம் வரையில் வாழ்க்கையின் சுவைபடலம் பேரானந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை. இதனால், மனஅமைதி குறைய தலைப்பட்டது. இப்படியே வேலை இல்லாமல் திரிந்து கொண்டிருந்தால், வாழும் காலம் எப்படி போய் முடிவது? என்ற கேள்விகள் எல்லா பக்கங்களிலிருந்தும் கிளம்பின. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வேலை தேடி அலைந்தேன். வாழ்வதற்கு என்ன வழி என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினேன். அதன் விளைவு நாடக நடிகனாக ஆனேன். இவ்வாறு தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார் கருணாநிதி. பக்கம் 81,82 ல்.............. *விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். அங்கு அறைகுறையாக உணவு கிடைக்கும். குளிப்பது என்பது அங்கு மிகவும் பெரிய பிரச்சனை. நாங்கள் குடியிருந்த இடத்திலிருந்து குளிக்க வேண்டுமென்றால், 1 கிமீட்டர் தூரமாவது செல்ல வேண்டும். வயலுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் இடங்களில் தான் எங்களது குளியல். அந்த குழாய் தான் எங்களுக்கு குற்றால அருவி. குடிநீர் எல்லாம். குளித்து விட்டு வீட்டுக்கு கிளம்புவோம். கடுமையான வெயில் கொளுத்தும். சிறிய துண்டை இடையில் கட்டிக் கொண்டு, துவைத்த சட்டையை தோளில் உலரப் போட்டுக் கொண்டு சவுக்கார சோப்பினால் வெண்மையாக மாற்றப்பட்ட வேட்டியை, இரு கைகளாலும் தலைக்கு மேலே குடை போல பிடித்துக் கொண்டு அதனை உலர வைத்தவாறு வீட்டிற்கு வந்து உலர்ந்த பின் அவற்றை அணிந்து கொண்டு பிற்பகல் உணவிற்கு தவமிருப்போம். இதற்கடுத்து, 92,93 ம் பக்கங்களில்................ * பெரியாரின் ஈரோட்டு குடியரசு பத்திரிகை அலுவலகத்தில் துணை ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாதம் சம்பளம் 40 ரூபாய். அதிலும் பிற்பகலும், இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய் பிடித்துக் கொள்வார்கள். காலை, மாலை சிற்றுண்டிக்காக மாதம் 10ரூபாய் போய் விடும். எனது இதர செலவுகள் ஐந்து ரூபாய். மீதம் 5 ரூபாயை தான் என்னை நம்பி அண்டி வந்த அருமை மனைவி பதமாவதிக்கு மாதந்தோறும் திருவாரூக்கு மணியார்டர் செய்வேன். பக்கம் 92,93 ல்.............................. * பெரிய அளவில் வைத்திய உதவிகளை எனது தந்தையாருக்கு செய்ய வசதியான நிலையில் குடும்பம் இல்லை. என் தந்தை இறந்து விட்டார். இப்படி கருணாநிதி எழுதிவைத்துள்ளார். இன்றைக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? 1.கருணாநிதியின் கோபாலபுரம் வீடு 2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம் 3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு 4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்கப்பட்டது) 5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம் 6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம் 7. அமிர்தம் வீடு- கோபாலபுரம் 8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம் 9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு 10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி 11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம் 12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்) 13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி) 14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு) 15. தயாநிதி மாறன் வீடு 16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை 17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு 18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில் 19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை 20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில் 21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை 22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம் 23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32 கிரவுண்ட் நிலம் 25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி 26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக 27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது 28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை 29. அந்தமான் தீவின் நிலங்கள் 30.அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள் 31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு 32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை 33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில் 34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது 35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு 36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர் தோட்டங்கள் 37. செல்வம் வீடு 38. முக.ஸ்டாலின் சொத்துக்கள் 39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை. 40.முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள், மதுரை நகரின் வீடியே பார்லர்கள், கடைகள், ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள் 41. செல்வம் வீடு-பெங்களுர் 42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர் 43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை 44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ் சாலை. 45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள் 46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, சென்னை. 47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர் 48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள். 49 .additional properties after semmuzi coimbatore farm house 50. broke bond land in coimbatore (given to rental for RMKV silks) extra extra extra extra இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை. திருவாரூரில் இருந்து கட்டிய வேட்டியும், தோளில் போட்ட துண்டுடன் , சென்னை நகருக்கு கள்ள ரயில் ஏறிவந்த கருணாநிதி குடும்பம் இன்று இந்திய பணக்காரர்கள் பட்டியலில். வாழ்க தமிழ்நாடு. வாழ்க வந்தாரை வாழழழழழழ வைக்கும் தமிழ்மக்கள் |
கிறுக்கியவன் பூவந்தி கிறுக்கிய நேரம் 8:11 AM 0 comments
Labels:Rasiganbalu,culture, தெரிந்து கொள்வோம்
January 13, 2010
HAPPY PONGAL


பானைகளும்
பிசாசுகளிடம்
அகப்பட்டுக் கிடக்கிறது
கொஞ்ச நாட்களாக.
பறிப்பிற்கான போராட்டம்
இரத்தம் சொட்டச் சொட்ட.
பொங்கல் பானைகள் முழுதும்
தமிழனின் இரத்தம் நிரப்பப்பட்டு.
பொங்கும் கைகள்கூட
அறுக்கப்பட்டு.
எங்கள் சுவாசங்களை
பறித்த பிசாசுகளிடமிருந்து
எங்களை மீட்கவே
எங்கள் மூச்சுத் திணறுகிறது.
பிறகு எங்கே
சர்க்கரைப் பொங்கலும்
வடையும் வாழைப்பழமும்.
எங்கள் கரங்கள் நிரந்தரமாய்
உணர்விழக்காது.
வேறு எந்த உதவியோ
ஊன்றுகோலோ அற்று
பிரபஞ்சத்தின்
வேர்களை அறுத்தல்லவா
ஆயுதமாக்கி
எதிரியை வழிமறித்துப்
போராடியபடி நாம்.
பிரளயமும் பூகம்பமும்
பூக்களைத் தறித்து மறிக்கும்
இலையுதிர்காலமும்
நீண்டு நிலைப்பதில்லை.
சர்க்கரைப் பொங்கலும்
வடையும் வாழைப்பழமும்
அடிபட்டுத் தின்ற
காலங்கள் மட்டும்
மணம் மாறாமல் மனதோடு.
பொங்கிய முற்றமும்
அந்த மூன்று கற்களும்
ஞாபகக் குறிப்புக்களில் இருந்தாலும்
காணாமல் போன பட்டியலில்.
கறையான் புற்றுக்களும்
பாம்புப் புற்றுக்களும்
மூடிக் காத்து வைத்திருக்கும்
சிலசமயம்
எங்கள் எச்சங்களை.
புராதனமான
நகரம் ஒன்றை உருவாக்குவோம்
புதிய எம் தேசத்தில்.
நீண்ட நெடிய தேடலின்பின்
பொங்கலின் வாசம்
மீண்டும்
முற்றத்துக் கோலம்
மாவிலை தோரணத்தோடு.
அன்றுவரை உறுதியோடு
காத்திருப்புக்கள் தொடரும்
மனதிற்குள் பொங்கியபடி!!!
கிறுக்கியவன் பூவந்தி கிறுக்கிய நேரம் 7:52 AM 0 comments
December 08, 2009
சிங்கப்பூரில் கார்த்திகை
கிறுக்கியவன் பூவந்தி கிறுக்கிய நேரம் 5:39 AM 0 comments
Labels:Rasiganbalu,culture, ஆன்மீகம், கார்த்திகை திருவிழா
August 20, 2009
குபேர மந்தரம்
குபேர மந்தரம்
இதை தினமும்
முறையாக
கடைபித்தால்
பணம் உங்கள் கையில் ................
கிறுக்கியவன் பூவந்தி கிறுக்கிய நேரம் 4:05 AM 0 comments
Labels:Rasiganbalu,culture, ஆன்மீகம்
August 05, 2009
பிள்ளையார் சுழிக்கு பின்னாடி இம்புட்டு விஷயம் இருக்கா!!!
பிள்ளையார் சுழிக்கு இன்னொரு காரணமும் உண்டு. சுழி என்பதே வளைசல், வக்ரம் என்றுதான் அர்த்தம். விநாயகரின் தும்பிக்கை வளைந்து சுருட்டிக் கொண்டு இருக்கிறது அல்லவா? பிள்ளையார் சுழி எப்படிப் போடுகிறோம்? முதலில் ஒரு வட்டம், அதுவும் அரை வட்டம், பின் ஒரு நேர்கோடு. பொதுவாய்ச் சக்கரங்கள் சுற்றுவதற்கு மத்தியில் ஒரு அச்சு வேண்டும். அந்த அச்சு வளையாமல் நேராக இருந்தால் தான் சக்கரம் சுற்றும். நாம் தீபாவளிக்கு விஷ்ணு சக்கரம் சுற்ற ஒரு நேரான கம்பியைத் தான் உபயோகிக்கிறோம் இல்லையா? அது போல்தான். இந்த உலகும், கிரகங்கள் அனைத்தும் வட்டமாய்த்தான் சுற்றி வருகின்றன, சூரிய சந்திரர் உள்பட. ஆனாலும் அவை எல்லாவற்றுக்கும் ஒரு ஆதாரமான சக்தி இருக்கும் இல்லையா? அது ஒரு நேர்கோடாய்த் தான் இருக்க முடியும். இதை நினைவு கூரவும் நாம் வட்டத்தை அரை வட்டமாய்ப்போட்டு விட்டுப் பின் ஒரு நேர்கோடு போடுகிறோம். மின்சாரம் எடுக்க எப்படி நீர்த்தாரையில் இருந்து சக்கரங்களை இணைத்து, அதாவது வட்டத்தில் இருந்து நேர்க்கோடாக மின்சாரத்தை எடுக்கிறோமோ அது போல்தான் இதுவும்.
"அ" "உ" "ம" மூன்றும் இணைந்தது தான் "ஓம்" என்னும் பிரணவம். அதை ஆங்கிலத்தில் எழுதும்போது "AUM"என்றே எழுத வேண்டும். இந்த அரை வட்டத்தில் ஆரம்பித்து நேர்கோடாக முடிகிற பிள்ளையார் சுழிக்கு இது தான் அர்த்தம். சிவசக்தியின் ஐக்கியத்தையும் குறிக்கிறது. "அ" என்ற சிருஷ்டியில் ஆரம்பித்து "உ" என்ற எழுத்தால் காப்பாற்றப் பட்டுக் கடைசியில் "ம" என்னும் எழுத்தால் சம்ஹாரம் செய்யப் படுகிறோம் அல்லவா? இந்த மூன்றில் நடுவில் உள்ள காக்கும் எழுத்தையே பிள்ளையார் சுழியாகப் போட்டு, அனைத்துக்கும் ஆதாரமும் இவரே, முடிவும் இவரே, சரணும் இவரே என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
கிறுக்கியவன் பூவந்தி கிறுக்கிய நேரம் 8:33 PM 2 comments
Labels:Rasiganbalu,culture, ஆன்மீகம்
May 11, 2009
இதழில் கதை எழுதும் நேரமிது
எனக்கு பிடித்த பாடலில் ஒன்று.......
airtel சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ரவி, ராகினி ரெண்டு பேரும் இதழில் கதை எழுதும் என தொடங்கும் பாடலை பாடியதை நான் இங்கு சொல்லியே ஆகா வேண்டும்
http://www.youtube.com/watch?v=0VpaTeUteHs&feature=related
இந்த பாடலின் வரிகள் இதோ உங்கள் முன்னாள்....
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது ஆஆஆஆஆஆஆஆஆ
மனதில் சுகம் மலரும் மாலையிது
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இருகரம் துடிக்குது
தனிமையில் நெருங்கிட இனிமையும் பிறக்குது
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது
காதல் கிளிகள் ரெண்டு ஜாடைப் பேசக் கண்டு
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும் போது
நீரோடை போலே என் நெஞ்சம் இனிக்கும்
இனிய பருவமுள்ள இளங்குயிலே
இனிய பருவமுள்ள இளங்குயிலே
ஏன் இன்னும் தாமதம்
மன்மதக் காவியம் என்னுடன் எழுது
நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
ஏங்கி தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
ஏக்கம் தணிந்திட ஒரு முறை தழுவடி
காலம் வரும் வரை பொருத்திருந்தால்
கன்னி இவள் மலர் கரம் தழுவிடுமே
காலம் என்றைக்கு கனிந்திடுமோ
காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ
மாலை மணமாலை இடும் வேளைதனில்
தேகம் இது விருந்துகள் படைத்திடும்
இதழில் கதை எழுதும் நேரமிது
தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே
பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த
மேகம்தனில் ஏது நீ சொல்வாய் கண்ணே
அழகைச் சுமந்து வரும் அழகரசி
அழகைச் சுமந்து வரும் அழகரசி
ஆனந்தப் பூ முகம்
அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ
நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது
மங்கை உன் பதில் மனதினைக் கவருது
மாறன் கணை வந்து மார்பினில் பாயுது
காமன் கணைகளைத் தடுத்திடவே
காதல் மயில் துணையென வருகிறது
மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகமெனும் நெருப்பினைப் பொழிகிறது
மோகம் நெருப்பானால் அதைத் தீர்க்கும்
ஒரு ஜீவநதி அருகினில் இருக்குது
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது ஆஆஆஆஆஆஆஆஆ
மனதில் சுகம் மலரும் மாலையிது
கிறுக்கியவன் பூவந்தி கிறுக்கிய நேரம் 4:33 AM 0 comments
Labels:Rasiganbalu,culture, எனக்கு பிடித்தது, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ரவி ராகினி, பாடல்
May 06, 2009
காபி - சிங்கிள் டீ நல்லதா - கெட்டதா?
காபி - சிங்கிள் டீ - ஏதாவது ஒன்று இல்லாமல் பெரும்பாலோருக்கு நேரம் நகராது; இருந்த இடத்தை விட்டு நகரவும் பிடிக்காது. அந்த அளவுக்கு இரண்டு பானங்களும் இந்தியர்களுடன் ஒட்டிவிட்டது. அதிலும், டீ குடிப்பவர்கள் கூட, காலையில் எழுந்ததும் காபி குடிக்க விரும்புவோர் அதிகம். காரணம், அதை சாப்பிட்டால் தான் ஏதோ உடலில் புத்துணர்ச்சி ஏற்பட்டது போல உணர்கின்றனர். தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் தான் டிகாஷன் காபி குடிக்கும் பழக்கம் பல ஆண்டாக இருக்கிறது. அதிலும், தமிழ்நாட்டில் தான் காபி குடிப்போர் அதிகம்.சமீப காலங்களில், பல மாநிலங்களிலும் மாடர்ன் காபி கடைகள் பெருக ஆரம்பித்து, காபி மோகம், இளைய தலைமுறையினரிடம் அதிகமாக காணப் படுகிறது.
நல்லதா - கெட்டதா?
காபி, உடலுக்கு நல்லதா கெட்டதா? - இந்த கேள்விக்கு இன்னும் சரியான பதில் கிடைக்கவில்லை. ஆனால், கெட்டது என்பதற்கான 100 சதவீத மருத்துவ ஆதாரங்களும் இல்லை. காபி குடித்தால் ரத்த அழுத்தம் வரும்; சர்க்கரை வியாதி ஏற்படும்; கால்சியம் போய், மூட்டு வலி ஏற்படும்... இப்படி பல பீதிகளை இன்னமும் கூட சொல்லித்தான் வருகின்றனர்.ஆனால், காபி கெட்டதல்ல என்பது மட்டும் இதுநாள் வரை ஆயிரக்கணக்கான சர்வதேச ஆராய்ச்சிகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
டி - ஹைட்ரேஷன்
காபி குடித்தால், உடலில் நீர் வற்றிப் போய்விடும். இது தான் "டி- ஹைட்ரேஷன்' என்பது. தலைசுற்றல், மயக்கம் ஏற்படும் என்று சொல்வர். ஆனால், அது உண்மையில்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.காபி 550 மில்லி குடித்தால், அதிக அளவு சிறுநீர் போவதில்லை. அதே சமயம், அதை விட குறைவான குளிர்பானம் குடித்தால், அதிக சிறுநீர் போகிறது என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இதய பாதிப்பா ?
இதய பாதிப்பு உள்ளவர்கள், காபியை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர்கள் சொல்வதுண்டு. காபியில் உள்ள காபின் சத்து, இதய பாதிப்பை அதிகப் படுத்தும் என்பது அவர்கள் கருத்து. ஆனால், ஒரு நாளைக்கு மூன்று கப் காபி குடித்தவர்களுக்கு, மற்றவர்களை விட, இருதய பாதிப்பு 25 சதவீதம் குறைவாகவே உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.காபி மூலம், ஆரம்பத்தில் லேசான ரத்த அழுத்தம் ஏற்படும். ஆனால், அது நீடிப்பதில்லை. கோலாக்களில் உள்ள பாதிப்பை விட, காபியில் வெகு குறைவு என்கின்றனர் நிபுணர்கள்.
கேன்சர் வருமா ?
காபி குடித்தால், கணையம் மற்றும் சிறுநீரக புற்றுநோய் வரும் என்று சொல்லி வருகின்றனர். அதுவும் பொய் என்று, அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட பல ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உண்மையில் காபி குடித்தால், கல்லீரல் புற்றுநோய் வரும் வாய்ப்பு பாதியாக குறைகிறது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
எலும்பு தேய்மானமா ?
காபியில், காபின் என்ற நச்சுப்பொருள் உள்ளது. காபி குடிப்பதால், அதில் உள்ள காபின் சத்து, உடலில் உள்ள கால்சியம் சத்து அறவே மறைந்து போகிறது. கால்சியம் சத்து இல்லாததால், எலும்புகளுக்கு திடத்தன்மை குறைகிறது. எலும்பு முறிவும், மூட்டு பாதிப்பும் ஏற்படுகிறது என்று சொல்வதுண்டு.காபியில் உள்ள காபின் மூலம் கால்சியம் குறையலாம்; ஆனால், காபியில் கலந்து குடிக்கும் பாலின் மூலம், உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கிறது என்பதே உண்மை.
எடை சரிகிறதா?
காபியில் உள்ள காபின் மூலம், ஒரு நாளைக்கு 75 முதல் 100 கலோரி வரை எரிக்கப் படுகிறது; ஒரு நாளைக்கு நான்கு கப் காபி குடித்தால், உடலின் எடை அதிகமாக குறையும் என்று கருத்து உள்ளது. ஆனால், சர்வதேச அளவில் மேற் கொள்ளப்பட்ட 500 க்கும் மேற்பட்ட ஆய்வுகளில், இதுவும் உண்மையல்ல என்று தெரியவந்துள்ளது.உண்மையில் காபி குடித்தால், அதில் உள்ள காபின் மூலம் உடல் எடை அதிகரிக்கவே செய்கிறது; குறையவில்லை என்று இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மூட் வருதில்ல!
காபி குடித்தால், உடலுக்கு கெடுதல் இல்லை என்பது பெரும் பாலான ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள் ளது. ஆனால், நல்லதா என்று சொல்ல முடியுமா? நாம் சாப்பிடும் பல பொருட்களில், நல்லதை விட, கெட்டதில்லை என்பது உறுதி செய்யப் பட்டுள்ளன. அப்படித்தான் காபியும் என்கின்றனர் நிபுணர்கள்."உடலில் புத்துணர்ச்சி ஏற்படவும், சுறுசுறுப்பு அதிகரிக்கவும் காபியை விட சிறந்த பானமில்லை' என்று சர்வதேச புகழ் ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவ ஆராய்ச்சிகழக நிபுணர்கள் கூறுகின்றனர்.
குடிங்க... குடிங்க!
காபி குடித்தால், மூளை சுறுசுறுப்படையும்; நன்றாக படிக்கலாம்; மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற முடியும். இரவில், தூங்காமல் இருக்க காபியை குடிப்பது பலரிடம் வழக்கமாக உள்ளது.இதுவரை, சர்க்கரை வியாதி வராமல் இருப்பவர் களை கணக்கெடுத்தால், அவர்கள் காபி குடிப்பவர் களாகத்தான் இருப்பர். அதுபோல, காபியால் கிடைத்த நன்மை என்றால், பர்கின்சன்ஸ் நோய் வரும் வாய்ப்பை 30 சதவீதம் குறைக்கிறதாம்.
நீங்க காபி குடிப்பவரா? தினமும் நான்கு வேளையாவது குடிப்பீர்களா? பத்தாண்டுக்கு மேல் குடிப்பவர், குழந்தைப்பருவத்தில் இருந்தே குடிப்பவர் என்றால், தாராளமாக குடியுங்கள். கவலையே படாதீர்கள். உங்களுக்கு ஒன்றும் வராது. டாக்டர் சொன்னாலொழிய நிறுத்த வேண்டாமே!........
கிறுக்கியவன் பூவந்தி கிறுக்கிய நேரம் 3:58 AM 0 comments
Labels:Rasiganbalu,culture, தெரிந்து கொள்வோம்
March 16, 2009
காதலிக்க நேரமில்லை பாடல் வரிகள்

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன்
செய்தி அனுப்பு
ஒ..என்னிடத்தில் தேக்கிவைத்த காதல் முழுதும் –
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை
காதலதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு
ஒ..பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போல நினைத்து கொள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்
என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு
ஒ..
யாரோ ? உன் காதலில் வாழ்வது யாரோ ?-
உன் கனவினில் நிறைவது யாரோ ?
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ !?
ஏனோ என் இரவுகள் நீள்வது, ஏனோ ?
ஒரு பகல் எனை சுடுவது ஏனோ,?
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ
காதல் தர நெஞ்சம் காத்துயிருக்கு
காதலிக்க அங்கு நேரம் இல்லையா ?
இலையை போல் என் இதயம் தவறி விழுதே
காதல் ஒரு இலையுதிர் காலமாய் மாறும்
என் நினைவுகள் சருகுகலாகும்
அந்த நேரத்தில் மழையென வாராயோ
ஏதோ ஒரு பறவையின் வடிவினில் கூட
ஒரு சாலையில் எதிர்ப்படுவாயா
உன் காதலை சிறகென தாரையா
காதல் தர நெஞ்சம் காத்துயிருக்கு
காதலிக்க அங்கு நேரம் இல்லையா ?
நினைக்கும் போதென் நிழலும் ஏனோ சுடுதே
கிறுக்கியவன் பூவந்தி கிறுக்கிய நேரம் 8:51 AM 0 comments
Labels:Rasiganbalu,culture, காதலிக்க நேரமில்லை, காதல், பாடல்
March 02, 2009
முத்தம் பற்றிய முத்தான குறிப்புகள்
கிறுக்கியவன் பூவந்தி கிறுக்கிய நேரம் 11:50 PM 1 comments
Labels:Rasiganbalu,culture, காதல், தெரிந்து கொள்வோம்
February 26, 2009
காதல் இதுதானோ


உன்னை முதல் முறை பார்த்ததும் பிடித்ததே
அன்று வியந்தேன் இது தான் காதலா என்று !!
அன்று வியந்தேன் இது தான் காதலா என்று !!
வியந்தேன் இது தான் காதலா என்று !!
கண்டு வியந்தேன் இது தான் காதலா என்று !!
இருவரும் மற்றவர் தவறுகளை மறக்கையில்
வியந்தேன் இது தான் காதலா என்று !!
நான் அழுகையில் வியந்தேன் இது தான் காதலா என்று !!
வியந்தேன் இது தான் காதலா என்று !!
வியந்தேன் இது தான் காதலா என்று !!
என் கண்ணீருக்கு தோள் கொடுக்கையில் வியந்தேன் இது தான் காதலா என்று !!
வியந்தேன் இது தான் காதலா என்று !!
வியந்தேன் இது தான் காதலா என்று !!
உணர்ந்தேன் இது தான் காதல் என்று !!
கிறுக்கியவன் பூவந்தி கிறுக்கிய நேரம் 2:50 AM 0 comments
Labels:Rasiganbalu,culture, காதல்
February 24, 2009
எப்படி தெரிந்தது உனக்கு

உன் படத்தையும்
என் படத்தையும்
வெட்டி ஒட்டி
ஜோடியாக ரசித்தது
உனக்கு தெரியாது,
உன் பெயரையும்
என் பெயரையும்
சேர்த்து எழுதி
ஆனதபட்டது
உனக்கு தெரியாது ,
உன் மேலுள்ள காதலால்
பிளேடால் கையை கீறி
ரத்தத்தால் உன் பெயரை
எழுதியது
உனக்கு தெரியாது,
இவையாவும்
தெரியாத
உனக்கு என் காதலின்
ஆழம் மட்டும்
எப்படி தெரிந்தது !!!!!!!!!
கிறுக்கியவன் பூவந்தி கிறுக்கிய நேரம் 9:42 AM 0 comments
மறக்கமுடியாத நாட்கள் எத்தனை...

மறக்கமுடியாத நாட்கள் எத்தனை...
புளியமரத்தடியில்
புத்தகத்தை படிக்காமல்
அவள் புன்னகை பேசுவதையும்
அவள் கண்கள் பேசுவதையும்
கண் சிமிட்டாமல்
முட்டி மோதி படித்த நாட்கள் எத்தனை
அந்த
மறக்கமுடியாத நாட்கள் எத்தனை.....
-------------------------------------------------
வருகை பதிவேட்டில்
அடுத்தக்டுது
பெயர்கள் அமைந்து இருக்க
எல்லோரும் வரிசையாய்
ப்ரெசென்ட் சார் என்று
சொல்லிக்கொண்டுவர
அவள் பார்ப்பதற்காகவே
ப்ரெசென்ட் சார் என்று
சொல்லாமல்
இருந்த நாட்கள் எத்தனை
அந்த
மறக்கமுடியாத நாட்கள் எத்தனை...
------------------------------------------------
எதாவது பேசலாம்
என்று
அருகில் செல்லும்போது
எதுவும் பேசாமல்
மெதுவாக
நகர்ந்த நாட்கள் எத்தனை
அந்த
மறக்கமுடியாத நாட்கள் எத்தனை..
------------------------------------------------
கிறுக்கியவன் பூவந்தி கிறுக்கிய நேரம் 8:40 AM 0 comments
Labels:Rasiganbalu,culture, காதல்





