" மாங்கல்யம் தந்துநானேன் மமஜீவன ஹேதுனா
கண்டேட் டே பத்நாமி சுபகே சஞ்சீவ சரதஸ்ஸம் "
-- ஒவ்வொரு திருமணத்தின்போதும் , மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டும்போது இந்த ஸ்லோகத்தை புரோகிதர் கூறுவார் .
இதன் அர்த்தம் தெரியுமா ?
" இது புனிதமான கயிறு . நான் நல்லபடியாக ஜீவித்திருக்க வலிமை தருவது . இதை , நான் உன் கழுத்தில் அணிவிக்கிறேன் . நீ எல்லாவித நலன்களும் , சிறப்புகளும் பெற்று நூறு வயது வாழ்வாயாக !" என்று , மாப்பிள்ளை பெண்ணைப்பார்த்து கூறுவதாக இந்த ஸ்லோகம் பொருள் தருகிறது .
---தினத்தந்தி , 07 - 04 - 2009 .
February 19, 2026
மாங்கல்யம் தந்துநானேன் மமஜீவன ஹேதுனா - இதன் அர்த்தம்
கிறுக்கியவன் பூவந்தி கிறுக்கிய நேரம் 10:53 AM 0 comments
Labels:Rasiganbalu,culture, ஆன்மீகம், தெரிந்து கொள்வோம், படித்ததில் பிடித்து
தேமுதிக திமுக உடன் கூட்டணி
தேமுதிக திமுக கூட்டணி என்பது பிரயோஜனம் இல்லாத ஒன்று.
கிறுக்கியவன் பூவந்தி கிறுக்கிய நேரம் 10:52 AM 0 comments
Labels:Rasiganbalu,culture, தேமுதிக
March 11, 2021
திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்
கிறுக்கியவன் பூவந்தி கிறுக்கிய நேரம் 4:04 AM 0 comments
சிவனுக்கு ஏன் வில்வம் இலை
கிறுக்கியவன் பூவந்தி கிறுக்கிய நேரம் 3:58 AM 0 comments
Labels:Rasiganbalu,culture, சிவன், வில்வம் இலை
March 10, 2021
விளக்கேற்றியவுடன் செய்ய கூடாதவை
கிறுக்கியவன் பூவந்தி கிறுக்கிய நேரம் 3:22 AM 0 comments
Labels:Rasiganbalu,culture, விளக்கேற்றியவுடன் செய்ய கூடாதவை
இறைவழிபாட்டில் பசுவுக்கும், பாம்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்??
கிறுக்கியவன் பூவந்தி கிறுக்கிய நேரம் 3:15 AM 0 comments
Labels:Rasiganbalu,culture, அதிக முக்கியத்துவம், இறைவழிபாட்டில் பசுவுக்கும், ஏன், பாம்புக்கும்
தஞ்சாவூர் பெரிய கோவில் பற்றி கிடைக்கப் பெற்ற செய்தி
கிறுக்கியவன் பூவந்தி கிறுக்கிய நேரம் 3:07 AM 0 comments
Labels:Rasiganbalu,culture, செய்தி, தஞ்சாவூர், பெரிய கோவில்
March 09, 2021
ஆன்மீகம் அறிவோம் _கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை!
கிறுக்கியவன் பூவந்தி கிறுக்கிய நேரம் 8:28 AM 0 comments
Labels:Rasiganbalu,culture, ஆன்மிக சிந்தனை, தீபம் ஏற்றும் முறை, விளக்கு, விளக்கை குளிர வைக்கும் முறை
January 15, 2011
தெரிந்து கொள்வோம்
1.மற்றவர்கள் துன்பத்தை அறிந்து கொள்.உன் துன்பம் அர்த்தமற்றதாகி விடும்.
2.எத்தனையோ துன்பங்களையும், சின்னச் சின்ன அவமானங்களையும் தான்டித் தான் உயரமுடியும்.
3.நண்பனாக நடிப்பவனை விட நேரடி எதிரி மேலானவன்.
4.இன்பத்திற்காக மனிதன் பல துன்பங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.
5.எத்தனை நாட்கள் வாழ்ந்தாய் என்பது பெரிதல்ல, வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்திருக்கிறாய் என்பதே பெரிது.
6.உனது முயற்ச்சிக்கு பயிற்ச்சியை உணவிடு, புரட்சிகள் பூக்களாய் மலரும்.
7.அறிவாளிகளின் வார்த்தைகளைவிட அனுபவசாலிகளின் வார்த்தை உன்னதமாய் இருக்கும்
8.அகங்காரம் அறிவை வளர்க்காது.
________________
உண்மக்காக எதையும் துறக்கலாம். ஆனால், எதன் பொருட்டும், உண்மையைத் துறக்கலாகாது
NET la padichathu.......
கிறுக்கியவன் பூவந்தி கிறுக்கிய நேரம் 9:58 PM 0 comments
Labels:Rasiganbalu,culture, தெரிந்து கொள்வோம், படித்ததில் பிடித்தது
நீ எதை அதிகம் விரும்பினாய்?
நீ எதை அதிகம் விரும்பினாய்?
ஓர் இளைஞன் சாக்ரடீஸிடம் வந்து வெற்றிக்கான இரகசியத்தைப் பற்றிக் கேட்டான். அதற்கு சாக்ரடீஸ் மறுநாள் காலை ஆற்றங்கரைக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். மறுநாள் காலை ஆற்றங்கரையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.
சாக்ரடீஸ் அந்த இளைஞனை ஆற்றை நோக்கி உள்ளே வரும்படி கேட்டுக் கொண்டார். கழுத்தளவு நீர் வரை உள்ளே வந்தவுடன் அந்த இளைஞனை நீரினுள் வைத்து அமுக்கினார். அவன் வெளியே வர முயற்சி செய்தான். ஆனாலும் அவனை அப்படியே அமுக்கியவாறு அவனது முகம் நீல நிறமாக மாறும் வரை வைத்திருந்தார். சற்றுப் பொறுத்து அவனது தலையை நீரினுள்ளிருந்து வெளியே இழுத்தவுடன் அந்த இளைஞன் செய்த முதல் வேலையே தன்னால் இயன்ற அளவு காற்றை மீண்டும் மீண்டும் உள்ளிழுத்தான்.
சாக்ரடீஸ் அவனிடம் “நீ நீருக்குள் இருந்த போது நீ எதை அதிகம் விரும்பினாய்?” என்று கேட்டார். அந்த இளைஞன் “காற்று” என்று பதிலளித்தான். சாக்ரடீஸ், “வெற்றியின் இரகசியமே அது தான் .நீ எவ்வளவு அதிகமாக காற்றை விரும்பினாயோ அது போன்றே வெற்றியையும் விரும்பினால் உனக்கு அது கிட்டும்” என்று சொன்னார்.
இதைத் தவிர வேறு எந்த ரகசியமும் இல்லை. “ஒரு சுட்டெரிக்கும் ஆசையே சாதனைகளின் தொடக்கமாகும். ஒரு சிறிய தீயால் எப்படி அதிக வெப்பத்தை தர முடியாதோ, அது போல ஒரு பலவீனமான ஆசையால் மிகப்பெரிய வெற்றியை உருவாக்க முடியாது”
கிறுக்கியவன் பூவந்தி கிறுக்கிய நேரம் 9:49 PM 0 comments
Labels:Rasiganbalu,culture, ஆன்மீகம், எனக்கு பிடித்தது, தெரிந்து கொள்வோம்