AddThis

Bookmark and Share

January 14, 2011

இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கருணாநிதி

We know it better but a revision by his own words… if u have time don’t miss it….

 [karunanithi-election.jpg]

தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கருணாநிதி

கருணாநிதியின் தனக்கு தானே எழுதிக் கொண்ட நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் பக்கம் 80 ல் கூறியிருப்பதை பார்க்கலாம். 

*1944 
ம் ஆண்டு எனக்கும், பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற்றது. ஓராண்டு காலம் வரையில் வாழ்க்கையின் சுவைபடலம் பேரானந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை.

 இதனால், மனஅமைதி குறைய தலைப்பட்டது. இப்படியே வேலை இல்லாமல் திரிந்து கொண்டிருந்தால், வாழும் காலம் எப்படி போய் முடிவது? என்ற கேள்விகள் எல்லா பக்கங்களிலிருந்தும் கிளம்பின. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வேலை தேடி அலைந்தேன். வாழ்வதற்கு என்ன வழி என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினேன். அதன் விளைவு நாடக நடிகனாக ஆனேன்.
இவ்வாறு தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார் கருணாநிதி.

பக்கம் 81,82 ல்..............
*விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். அங்கு அறைகுறையாக உணவு கிடைக்கும். குளிப்பது என்பது அங்கு மிகவும் பெரிய பிரச்சனை. நாங்கள் குடியிருந்த இடத்திலிருந்து குளிக்க வேண்டுமென்றால், 1 கிமீட்டர் தூரமாவது செல்ல வேண்டும். வயலுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் இடங்களில் தான் எங்களது குளியல். அந்த குழாய் தான் எங்களுக்கு குற்றால அருவி. குடிநீர் எல்லாம். குளித்து விட்டு வீட்டுக்கு கிளம்புவோம். கடுமையான வெயில் கொளுத்தும். சிறிய துண்டை இடையில் கட்டிக் கொண்டு, துவைத்த சட்டையை தோளில் உலரப் போட்டுக் கொண்டு சவுக்கார சோப்பினால் வெண்மையாக மாற்றப்பட்ட வேட்டியை, இரு கைகளாலும் தலைக்கு மேலே குடை போல பிடித்துக் கொண்டு அதனை உலர வைத்தவாறு வீட்டிற்கு வந்து உலர்ந்த பின் அவற்றை அணிந்து கொண்டு பிற்பகல் உணவிற்கு தவமிருப்போம்.

இதற்கடுத்து, 92,93 ம் பக்கங்களில்................
* பெரியாரின் ஈரோட்டு குடியரசு பத்திரிகை அலுவலகத்தில் துணை ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாதம் சம்பளம் 40 ரூபாய். அதிலும் பிற்பகலும், இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய் பிடித்துக் கொள்வார்கள். காலை, மாலை சிற்றுண்டிக்காக மாதம் 10ரூபாய் போய் விடும். எனது இதர செலவுகள் ஐந்து ரூபாய். மீதம் 5 ரூபாயை தான் என்னை நம்பி அண்டி வந்த அருமை மனைவி பதமாவதிக்கு மாதந்தோறும் திருவாரூக்கு மணியார்டர் செய்வேன். 

பக்கம் 92,93 ல்..............................
* பெரிய அளவில் வைத்திய உதவிகளை எனது தந்தையாருக்கு செய்ய வசதியான நிலையில் குடும்பம் இல்லை. என் தந்தை இறந்து விட்டார். 

இப்படி கருணாநிதி எழுதிவைத்துள்ளார்.
இன்றைக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

1.கருணாநிதியின் கோபாலபுரம் வீடு
2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்
3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு
4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்கப்பட்டது)
5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம்
6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்
7. அமிர்தம் வீடு- கோபாலபுரம்
8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்
9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு
10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி
11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்
12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)
13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)
14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)
15. தயாநிதி மாறன் வீடு
16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை
17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு
18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்
19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை
20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில்
21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை
22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்
23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32 கிரவுண்ட் நிலம்
25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி
26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக
27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது
28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை
29. அந்தமான் தீவின் நிலங்கள்
30.அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள்
31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு
32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை
33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்
34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது
35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு
36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர் தோட்டங்கள்
37. செல்வம் வீடு
38. முக.ஸ்டாலின் சொத்துக்கள்
39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை.
40.முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள், மதுரை நகரின் வீடியே பார்லர்கள், கடைகள், ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள்
41. செல்வம் வீடு-பெங்களுர்
42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர்
43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை
44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ் சாலை.
45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள்
46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, சென்னை.
47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள். 
49 .additional properties  after semmuzi   coimbatore farm house
50. broke bond land in coimbatore (given to rental for RMKV silks)
extra extra extra  extra  

இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.
திருவாரூரில் இருந்து கட்டிய வேட்டியும், தோளில் போட்ட துண்டுடன் , சென்னை நகருக்கு கள்ள ரயில் ஏறிவந்த கருணாநிதி குடும்பம் இன்று இந்திய பணக்காரர்கள் பட்டியலில்.

வாழ்க தமிழ்நாடு. வாழ்க வந்தாரை வாழழழழழழ வைக்கும் தமிழ்மக்கள்

( இந்த செய்தி மின்னஞ்சல் மூலமாக எனக்கு வந்தது.)

January 13, 2010

HAPPY PONGAL





பொங்கல் பொருட்களும்
பானைகளும்
பிசாசுகளிடம்
அகப்பட்டுக் கிடக்கிறது
கொஞ்ச நாட்களாக.


பறிப்பிற்கான போராட்டம்
இரத்தம் சொட்டச் சொட்ட.
பொங்கல் பானைகள் முழுதும்
தமிழனின் இரத்தம் நிரப்பப்பட்டு.
பொங்கும் கைகள்கூட
அறுக்கப்பட்டு.


எங்கள் சுவாசங்களை
பறித்த பிசாசுகளிடமிருந்து
எங்களை மீட்கவே
எங்கள் மூச்சுத் திணறுகிறது.
பிறகு எங்கே
சர்க்கரைப் பொங்கலும்
வடையும் வாழைப்பழமும்.


எங்கள் கரங்கள் நிரந்தரமாய்
உணர்விழக்காது.
வேறு எந்த உதவியோ
ஊன்றுகோலோ அற்று
பிரபஞ்சத்தின்
வேர்களை அறுத்தல்லவா
ஆயுதமாக்கி
எதிரியை வழிமறித்துப்
போராடியபடி நாம்.


பிரளயமும் பூகம்பமும்
பூக்களைத் தறித்து மறிக்கும்
இலையுதிர்காலமும்
நீண்டு நிலைப்பதில்லை.


சர்க்கரைப் பொங்கலும்
வடையும் வாழைப்பழமும்
அடிபட்டுத் தின்ற
காலங்கள் மட்டும்
மணம் மாறாமல் மனதோடு.


பொங்கிய முற்றமும்
அந்த மூன்று கற்களும்
ஞாபகக் குறிப்புக்களில் இருந்தாலும்
காணாமல் போன பட்டியலில்.


கறையான் புற்றுக்களும்
பாம்புப் புற்றுக்களும்
மூடிக் காத்து வைத்திருக்கும்
சிலசமயம்
எங்கள் எச்சங்களை.


புராதனமான
நகரம் ஒன்றை உருவாக்குவோம்
புதிய எம் தேசத்தில்.
நீண்ட நெடிய தேடலின்பின்
பொங்கலின் வாசம்
மீண்டும்
முற்றத்துக் கோலம்
மாவிலை தோரணத்தோடு.


அன்றுவரை உறுதியோடு
காத்திருப்புக்கள் தொடரும்
மனதிற்குள் பொங்கியபடி!!!


December 08, 2009

சிங்கப்பூரில் கார்த்திகை







ரசிகன்பாலு-இயற்கை காதலன்
Posted by Picasa

August 20, 2009

குபேர மந்தரம்

குபேர மந்தரம்
இதை தினமும்
முறையாக
கடைபித்தால்
பணம் உங்கள் கையில் ................

August 05, 2009

பிள்ளையார் சுழிக்கு பின்னாடி இம்புட்டு விஷயம் இருக்கா!!!


எதை எழுத ஆரம்பிச்சாலும் பிள்ளையார் சுழி போட்டுட்டுத் தான் எழுதறோம். இல்லையா? அதுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. உலகில் முதன் முதல் எழுத ஆரம்பித்தவரே நம்ம பிள்ளையார் தான். என்ன ஆச்சரியமா இருக்கா? ஆமாம், வியாசரின் மகாபாரதத்தை அவர் சொல்லச் சொல்லத் தன் தந்தத்தை உடைத்து எழுத்தாணியாக்கி எழுதி வந்தவர் பிள்ளையார் தான். அதுவும் எப்படி? வியாசர் சற்றும் நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே போவார். இவர் எதிர்க்கேள்வி கேட்காமல் எழுதிக் கொண்டே போக வேண்டும். ஒரு கட்டத்தில் வியாசருக்குப் பயமே வந்துடுச்சாம், என்னடா இது! இந்தப் பிள்ளையார் எழுதற வேகத்துக்கு நம்மால் சொல்ல முடியாது போலிருக்கேன்னு. உடனே என்ன செஞ்சாராம் தெரியுமா? நான் சொல்ற ஸ்லோகங்களோட அர்த்தத்தைப் புரிந்து கொண்டு எழுத வேண்டும் என்று பிள்ளையாரிடம் சொல்லி விட்டார். வேதமுழு முதல்வனான பிள்ளையாரைச் சோதனை போட்டால் சரியா வருமா? அவரும் அப்படியே சரின்னு அர்த்தம் புரிந்து கொண்டு எழுத ஆரம்பித்தாராம். இதுக்காகவே ரொம்ப யோசித்து, யோசித்துச் சிக்கலான பதங்களையும், அரத்தங்களையும் கொண்ட ஸ்லோகங்களை வியாசர் சொல்ல விநாயகர் மெளனமாய் அதன் பொருளை உணர்ந்து எழுதி வந்தார். பத்ரிநாத்தில் வியாசர் மகாபாரதம் எழுதிய குகையும், பிள்ளையார் எழுதியவாறு அமர்ந்த கோலத்தில் இருப்பதையும் தரிசிக்கும் வண்ணம் ஒரு கோயில், பத்ரிநாத்தில் இருந்து சீன எல்லைக்குப் போகும் வழியில் உள்ள "மானா" என்னும் கிராமத்தில் உள்ளது. இப்போதும் அந்தக் கோவிலையும், வியாசர் இருந்த குகையையும் தரிசிக்கலாம்.

பிள்ளையார் சுழிக்கு இன்னொரு காரணமும் உண்டு. சுழி என்பதே வளைசல், வக்ரம் என்றுதான் அர்த்தம். விநாயகரின் தும்பிக்கை வளைந்து சுருட்டிக் கொண்டு இருக்கிறது அல்லவா? பிள்ளையார் சுழி எப்படிப் போடுகிறோம்? முதலில் ஒரு வட்டம், அதுவும் அரை வட்டம், பின் ஒரு நேர்கோடு. பொதுவாய்ச் சக்கரங்கள் சுற்றுவதற்கு மத்தியில் ஒரு அச்சு வேண்டும். அந்த அச்சு வளையாமல் நேராக இருந்தால் தான் சக்கரம் சுற்றும். நாம் தீபாவளிக்கு விஷ்ணு சக்கரம் சுற்ற ஒரு நேரான கம்பியைத் தான் உபயோகிக்கிறோம் இல்லையா? அது போல்தான். இந்த உலகும், கிரகங்கள் அனைத்தும் வட்டமாய்த்தான் சுற்றி வருகின்றன, சூரிய சந்திரர் உள்பட. ஆனாலும் அவை எல்லாவற்றுக்கும் ஒரு ஆதாரமான சக்தி இருக்கும் இல்லையா? அது ஒரு நேர்கோடாய்த் தான் இருக்க முடியும். இதை நினைவு கூரவும் நாம் வட்டத்தை அரை வட்டமாய்ப்போட்டு விட்டுப் பின் ஒரு நேர்கோடு போடுகிறோம். மின்சாரம் எடுக்க எப்படி நீர்த்தாரையில் இருந்து சக்கரங்களை இணைத்து, அதாவது வட்டத்தில் இருந்து நேர்க்கோடாக மின்சாரத்தை எடுக்கிறோமோ அது போல்தான் இதுவும்.
"அ" "உ" "ம" மூன்றும் இணைந்தது தான் "ஓம்" என்னும் பிரணவம். அதை ஆங்கிலத்தில் எழுதும்போது "AUM"என்றே எழுத வேண்டும். இந்த அரை வட்டத்தில் ஆரம்பித்து நேர்கோடாக முடிகிற பிள்ளையார் சுழிக்கு இது தான் அர்த்தம். சிவசக்தியின் ஐக்கியத்தையும் குறிக்கிறது. "அ" என்ற சிருஷ்டியில் ஆரம்பித்து "உ" என்ற எழுத்தால் காப்பாற்றப் பட்டுக் கடைசியில் "ம" என்னும் எழுத்தால் சம்ஹாரம் செய்யப் படுகிறோம் அல்லவா? இந்த மூன்றில் நடுவில் உள்ள காக்கும் எழுத்தையே பிள்ளையார் சுழியாகப் போட்டு, அனைத்துக்கும் ஆதாரமும் இவரே, முடிவும் இவரே, சரணும் இவரே என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

May 11, 2009

இதழில் கதை எழுதும் நேரமிது

எனக்கு பிடித்த பாடலில் ஒன்று.......

airtel
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ரவி, ராகினி ரெண்டு பேரும் இதழில் கதை எழுதும் என தொடங்கும் பாடலை பாடியதை நான் இங்கு சொல்லியே ஆகா வேண்டும்

http://www.youtube.com/watch?v=0VpaTeUteHs&feature=related

இந்த பாடலின் வரிகள் இதோ உங்கள் முன்னாள்....


இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது ஆஆஆஆஆஆஆஆஆ
மனதில் சுகம் மலரும் மாலையிது

இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இருகரம் துடிக்குது
தனிமையில் நெருங்கிட இனிமையும் பிறக்குது

இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது

காதல் கிளிகள் ரெண்டு ஜாடைப் பேசக் கண்டு
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும் போது
நீரோடை போலே என் நெஞ்சம் இனிக்கும்
இனிய பருவமுள்ள இளங்குயிலே
இனிய பருவமுள்ள இளங்குயிலே

ஏன் இன்னும் தாமதம்
மன்மதக் காவியம் என்னுடன் எழுது

நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
ஏங்கி தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
ஏக்கம் தணிந்திட ஒரு முறை தழுவடி
காலம் வரும் வரை பொருத்திருந்தால்
கன்னி இவள் மலர் கரம் தழுவிடுமே
காலம் என்றைக்கு கனிந்திடுமோ
காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ
மாலை மணமாலை இடும் வேளைதனில்
தேகம் இது விருந்துகள் படைத்திடும்
இதழில் கதை எழுதும் நேரமிது

தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே
பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த
மேகம்தனில் ஏது நீ சொல்வாய் கண்ணே
அழகைச் சுமந்து வரும் அழகரசி
அழகைச் சுமந்து வரும் அழகரசி

ஆனந்தப் பூ முகம்
அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ

நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது
மங்கை உன் பதில் மனதினைக் கவருது
மாறன் கணை வந்து மார்பினில் பாயுது

காமன் கணைகளைத் தடுத்திடவே
காதல் மயில் துணையென வருகிறது
மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகமெனும் நெருப்பினைப் பொழிகிறது
மோகம் நெருப்பானால் அதைத் தீர்க்கும்
ஒரு ஜீவநதி அருகினில் இருக்குது

இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது ஆஆஆஆஆஆஆஆஆ
மனதில் சுகம் மலரும் மாலையிது

May 06, 2009

காபி - சிங்கிள் டீ நல்லதா - கெட்டதா?




காபி - சிங்கிள் டீ - ஏதாவது ஒன்று இல்லாமல் பெரும்பாலோருக்கு நேரம் நகராது; இருந்த இடத்தை விட்டு நகரவும் பிடிக்காது. அந்த அளவுக்கு இரண்டு பானங்களும் இந்தியர்களுடன் ஒட்டிவிட்டது. அதிலும், டீ குடிப்பவர்கள் கூட, காலையில் எழுந்ததும் காபி குடிக்க விரும்புவோர் அதிகம். காரணம், அதை சாப்பிட்டால் தான் ஏதோ உடலில் புத்துணர்ச்சி ஏற்பட்டது போல உணர்கின்றனர். தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் தான் டிகாஷன் காபி குடிக்கும் பழக்கம் பல ஆண்டாக இருக்கிறது. அதிலும், தமிழ்நாட்டில் தான் காபி குடிப்போர் அதிகம்.சமீப காலங்களில், பல மாநிலங்களிலும் மாடர்ன் காபி கடைகள் பெருக ஆரம்பித்து, காபி மோகம், இளைய தலைமுறையினரிடம் அதிகமாக காணப் படுகிறது.


நல்லதா - கெட்டதா?


காபி, உடலுக்கு நல்லதா கெட்டதா? - இந்த கேள்விக்கு இன்னும் சரியான பதில் கிடைக்கவில்லை. ஆனால், கெட்டது என்பதற்கான 100 சதவீத மருத்துவ ஆதாரங்களும் இல்லை. காபி குடித்தால் ரத்த அழுத்தம் வரும்; சர்க்கரை வியாதி ஏற்படும்; கால்சியம் போய், மூட்டு வலி ஏற்படும்... இப்படி பல பீதிகளை இன்னமும் கூட சொல்லித்தான் வருகின்றனர்.ஆனால், காபி கெட்டதல்ல என்பது மட்டும் இதுநாள் வரை ஆயிரக்கணக்கான சர்வதேச ஆராய்ச்சிகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.


டி - ஹைட்ரேஷன்


காபி குடித்தால், உடலில் நீர் வற்றிப் போய்விடும். இது தான் "டி- ஹைட்ரேஷன்' என்பது. தலைசுற்றல், மயக்கம் ஏற்படும் என்று சொல்வர். ஆனால், அது உண்மையில்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.காபி 550 மில்லி குடித்தால், அதிக அளவு சிறுநீர் போவதில்லை. அதே சமயம், அதை விட குறைவான குளிர்பானம் குடித்தால், அதிக சிறுநீர் போகிறது என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.


இதய பாதிப்பா ?


இதய பாதிப்பு உள்ளவர்கள், காபியை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர்கள் சொல்வதுண்டு. காபியில் உள்ள காபின் சத்து, இதய பாதிப்பை அதிகப் படுத்தும் என்பது அவர்கள் கருத்து. ஆனால், ஒரு நாளைக்கு மூன்று கப் காபி குடித்தவர்களுக்கு, மற்றவர்களை விட, இருதய பாதிப்பு 25 சதவீதம் குறைவாகவே உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.காபி மூலம், ஆரம்பத்தில் லேசான ரத்த அழுத்தம் ஏற்படும். ஆனால், அது நீடிப்பதில்லை. கோலாக்களில் உள்ள பாதிப்பை விட, காபியில் வெகு குறைவு என்கின்றனர் நிபுணர்கள்.


கேன்சர் வருமா ?


காபி குடித்தால், கணையம் மற்றும் சிறுநீரக புற்றுநோய் வரும் என்று சொல்லி வருகின்றனர். அதுவும் பொய் என்று, அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட பல ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உண்மையில் காபி குடித்தால், கல்லீரல் புற்றுநோய் வரும் வாய்ப்பு பாதியாக குறைகிறது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.


எலும்பு தேய்மானமா ?


காபியில், காபின் என்ற நச்சுப்பொருள் உள்ளது. காபி குடிப்பதால், அதில் உள்ள காபின் சத்து, உடலில் உள்ள கால்சியம் சத்து அறவே மறைந்து போகிறது. கால்சியம் சத்து இல்லாததால், எலும்புகளுக்கு திடத்தன்மை குறைகிறது. எலும்பு முறிவும், மூட்டு பாதிப்பும் ஏற்படுகிறது என்று சொல்வதுண்டு.காபியில் உள்ள காபின் மூலம் கால்சியம் குறையலாம்; ஆனால், காபியில் கலந்து குடிக்கும் பாலின் மூலம், உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கிறது என்பதே உண்மை.


எடை சரிகிறதா?


காபியில் உள்ள காபின் மூலம், ஒரு நாளைக்கு 75 முதல் 100 கலோரி வரை எரிக்கப் படுகிறது; ஒரு நாளைக்கு நான்கு கப் காபி குடித்தால், உடலின் எடை அதிகமாக குறையும் என்று கருத்து உள்ளது. ஆனால், சர்வதேச அளவில் மேற் கொள்ளப்பட்ட 500 க்கும் மேற்பட்ட ஆய்வுகளில், இதுவும் உண்மையல்ல என்று தெரியவந்துள்ளது.உண்மையில் காபி குடித்தால், அதில் உள்ள காபின் மூலம் உடல் எடை அதிகரிக்கவே செய்கிறது; குறையவில்லை என்று இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


மூட் வருதில்ல!


காபி குடித்தால், உடலுக்கு கெடுதல் இல்லை என்பது பெரும் பாலான ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள் ளது. ஆனால், நல்லதா என்று சொல்ல முடியுமா? நாம் சாப்பிடும் பல பொருட்களில், நல்லதை விட, கெட்டதில்லை என்பது உறுதி செய்யப் பட்டுள்ளன. அப்படித்தான் காபியும் என்கின்றனர் நிபுணர்கள்."உடலில் புத்துணர்ச்சி ஏற்படவும், சுறுசுறுப்பு அதிகரிக்கவும் காபியை விட சிறந்த பானமில்லை' என்று சர்வதேச புகழ் ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவ ஆராய்ச்சிகழக நிபுணர்கள் கூறுகின்றனர்.


குடிங்க... குடிங்க!


காபி குடித்தால், மூளை சுறுசுறுப்படையும்; நன்றாக படிக்கலாம்; மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற முடியும். இரவில், தூங்காமல் இருக்க காபியை குடிப்பது பலரிடம் வழக்கமாக உள்ளது.இதுவரை, சர்க்கரை வியாதி வராமல் இருப்பவர் களை கணக்கெடுத்தால், அவர்கள் காபி குடிப்பவர் களாகத்தான் இருப்பர். அதுபோல, காபியால் கிடைத்த நன்மை என்றால், பர்கின்சன்ஸ் நோய் வரும் வாய்ப்பை 30 சதவீதம் குறைக்கிறதாம்.


நீங்க காபி குடிப்பவரா? தினமும் நான்கு வேளையாவது குடிப்பீர்களா? பத்தாண்டுக்கு மேல் குடிப்பவர், குழந்தைப்பருவத்தில் இருந்தே குடிப்பவர் என்றால், தாராளமாக குடியுங்கள். கவலையே படாதீர்கள். உங்களுக்கு ஒன்றும் வராது. டாக்டர் சொன்னாலொழிய நிறுத்த வேண்டாமே!........

March 16, 2009

காதலிக்க நேரமில்லை பாடல் வரிகள்


என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன்
செய்தி அனுப்பு
ஒ..என்னிடத்தில் தேக்கிவைத்த காதல் முழுதும் –
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை
காதலதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு
ஒ..பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போல நினைத்து கொள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு
ஒ..

யாரோ ? உன் காதலில் வாழ்வது யாரோ ?-
உன் கனவினில் நிறைவது யாரோ ?
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ !?
ஏனோ என் இரவுகள் நீள்வது, ஏனோ ?
ஒரு பகல் எனை சுடுவது ஏனோ,?
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ
காதல் தர நெஞ்சம் காத்துயிருக்கு
காதலிக்க அங்கு நேரம் இல்லையா ?
இலையை போல் என் இதயம் தவறி விழுதே

காதல் ஒரு இலையுதிர் காலமாய் மாறும்
என் நினைவுகள் சருகுகலாகும்
அந்த நேரத்தில் மழையென வாராயோ

ஏதோ ஒரு பறவையின் வடிவினில் கூட
ஒரு சாலையில் எதிர்ப்படுவாயா
உன் காதலை சிறகென தாரையா
காதல் தர நெஞ்சம் காத்துயிருக்கு
காதலிக்க அங்கு நேரம் இல்லையா ?

நினைக்கும் போதென் நிழலும் ஏனோ சுடுதே

March 02, 2009

முத்தம் பற்றிய முத்தான குறிப்புகள்


* ஒரு முறை முத்தமிடுவதால் நம் முகத்தின் 29 தசைகள் இயங்க வைக்கப்படுகிறது


*எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக முத்தமிடுகிறோமோ அதற்கு சமமாக முதுமையால் நமது முகத்தில் சுருக்கம் விழுவது குறையும் .


*காதலர்கள் இதழோடு இதழினைத்து முத்தமிடுகையில் பரிமாறிகொள்ளும் எச்சிலில் பல முக்கியமான கொழுப்பு , சில ஊட்டச்சத்துக்கள் , புரதம் என பல வித விடயங்களும் இருப்பதால் , அது முத்தமிடுபவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது .


*66% பேர் முத்தமிடுகையில் முகத்தை மூடிக்கொள்கின்றனர் , மீதி பேர் மட்டுமே கண்களை திறந்த படி தனது பார்ட்னரை பார்த்த படி முத்தமிடுகின்றனர் .


*அமெரிக்க பெண்கள் தனது திருமணத்திற்கு முன் குறைந்தது 80 ஆண்களையாவது முத்தமிடுகின்றனர் என ஒரு ஆய்வு கூறுகிறது .


*உலகில் ஒரு மனிதன் தனது வாழ்நாளின் இருபதாயிரத்து நூற்றி அறுபது நிமிடங்கள் அதாவது இரண்டு வாரங்கள் முத்தமிடுவதில் கழிக்கிறான். *நம் உதடுகளின் SENSITIVITYயானது நம் விரல்களை விட 200 மடங்கு அதிகமானது .


*இந்தியாவில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களை விட வீட்டில் பார்த்து முடிக்கப்படும் திருமணம் செய்து கொண்டவர்கள் அதிகம் முத்தமிட்டு கொளவதாக ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது .


*ஒரு முறை முத்தமிடுவதால் , 2-3 கலோரிகள் நம் உடலில் எரிக்கப்படுகிறது , அதுவே பிரெஞ்சு முத்தமாக இருக்கும் பட்சத்தில் 5 கலோரி அளவுக்கு சக்தி எரிக்கப்படுகிறது.


*வேலைக்கு செல்வதற்கு முன் தன் மனைவியை முத்தமிட்டு செல்பவர்கள் , அப்படி செய்யாதவர்களை விட 5 ஆண்டுகள் கூடுதலாக தனது தொழிலை மேற்கொள்கின்றனர்.


*மிக அதிக உணர்ச்சியுடன் 90 விநாடிகள் வரை முத்தமிட்டு கொள்பவர்களின் இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் மிக அதிக அளவிற்கு செல்வதால் அவர்களது வாழ்நாளில் ஒரு நிமிடம் குறைகிறது.


*எஸ்கிமோக்கள் மற்றும் மலேசியர்கள் தங்களது மூக்கால் முத்தமிட்டு கொள்கின்றனர் .


*முத்தமிடுதல் பெண்களின் மன அழுத்தத்தை பெருமளவில் குறைக்கிறது. , ஆண்களுக்கு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது.


*குண்டாயிருப்பவர்கள் தொடர்ந்து ஒரு நிமிடம் வரை முத்தமிடுவதால் தனது உடலின் 26 கலோரிகளை குறைக்க இயலும் . இதனால் தொப்பை குறைகிறதாம்.


*முத்தமிடுதல் மற்றும் முத்தம் குறித்த ஆராய்ச்சிக்கு PHILEMOTOLOGY என்று பெயர் .


*5 மில்லியன் பாக்டீரியாக்கள் முத்தமிடுகையில் பரிமாறப்படுகிறது.


*ORBICULARIS ORIS எனபதே முத்த தசை ஆகும்.


*முத்தமிடுகையில் பெரும்பாலும் நாம் வலது புறமாகவே முத்தமிடுகிறோம் , ஏன் எனில் நமது மூளையில் நமது உணர்ச்சிகள் வலது பக்கமே கட்டுப்படுத்தப்படுகிறது.


*சினிமாவில் வெளியான முதல் முத்தகாட்சி 1896ல் வெளியான THE KISS திரைப்படத்தில் JOHN.C.RICE எனும் நடிகர் MAY IRWIN எனும் நடிகைக்கு கொடுத்ததேயாகும்.


*கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்ட மிக நீளமான முத்தம் 417 மணிநேரமாம்.


*இரவில் நாம் முத்தமிட நமது மூளையில் சில சிறப்பு நியுரான்கள் இருப்பாதலேயே நம்மால் இருட்டிலும் சரியாக முத்தமிட முடிகிறதாம்.


*முத்தமிடுவதால் எய்ட்ஸ் பரவுவதில்லை


*இங்கிலாந்தில் மட்டுமே ஜீலை 6 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய முத்த தினமாக கொண்டாடப்படடது .


*அத்தினமே பிற்காலத்தில் உலக முத்ததினமாக மாறியது


* முத்தம் குறித்த ஒரு பழமொழி - அணைப்பில்லா முத்தம் மணமில்லா பூ போன்றது.


நன்றி - www.google.co.in
பின் குறிப்பு : அதிஷாவின் வெப் சைடில் இடம்பெற்றவை

February 26, 2009

காதல் இதுதானோ
























உன்னை முதல் முறை பார்த்ததும் பிடித்ததே
அன்று வியந்தேன் இது தான் காதலா என்று !!


நம் கண்கள் என்று சந்தித்ததோ
அன்று வியந்தேன் இது தான் காதலா என்று !!


நாம் கைகோர்த்து நடக்கையில்
வியந்தேன் இது தான் காதலா என்று !!


நம் மெளனங்கள் பேசியதை
கண்டு வியந்தேன் இது தான் காதலா என்று !!

இருவரும் மற்றவர் தவறுகளை மறக்கையில்
வியந்தேன் இது தான் காதலா என்று !!


உன்னை கடிந்து பேசியபின்
நான் அழுகையில் வியந்தேன் இது தான் காதலா என்று !!


புன்னகையில் என் சோகங்களை மறக்கையில்
வியந்தேன் இது தான் காதலா என்று !!


என் சுமைகளை நீ சுமப்பதை கண்டு
வியந்தேன் இது தான் காதலா என்று !!

என் கண்ணீருக்கு தோள் கொடுக்கையில் வியந்தேன் இது தான் காதலா என்று !!


நிமிடமும் உன் நினைவுகள் என்னை ஆட்கொள்கையில்
வியந்தேன் இது தான் காதலா என்று !!


உன்னை பிறிந்த போதும் நீ என்னுள் இருக்கையில்
வியந்தேன் இது தான் காதலா என்று !!


இன்று உன் மடியில் குழந்தையென மாறியதும்
உணர்ந்தேன் இது தான் காதல் என்று !!



February 24, 2009

எப்படி தெரிந்தது உனக்கு


உன் படத்தையும்
என் படத்தையும்
வெட்டி ஒட்டி
ஜோடியாக ரசித்தது
உனக்கு தெரியாது,

உன் பெயரையும்
என் பெயரையும்
சேர்த்து எழுதி
ஆனதபட்டது
உனக்கு தெரியாது ,

உன் மேலுள்ள காதலால்
பிளேடால் கையை கீறி
ரத்தத்தால் உன் பெயரை
எழுதியது
உனக்கு தெரியாது,

இவையாவும்
தெரியாத
உனக்கு என் காதலின்
ஆழம் மட்டும்
எப்படி தெரிந்தது !!!!!!!!!

மறக்கமுடியாத நாட்கள் எத்தனை...


மறக்கமுடியாத நாட்கள் எத்தனை...

புளியமரத்தடியில்
புத்தகத்தை படிக்காமல்
அவள் புன்னகை பேசுவதையும்
அவள் கண்கள் பேசுவதையும்
கண் சிமிட்டாமல்
முட்டி மோதி படித்த நாட்கள் எத்தனை
அந்த
மறக்கமுடியாத நாட்கள் எத்தனை.....
-------------------------------------------------
வருகை பதிவேட்டில்
அடுத்தக்டுது
பெயர்கள் அமைந்து இருக்க
எல்லோரும் வரிசையாய்
ப்ரெசென்ட் சார் என்று
சொல்லிக்கொண்டுவர
அவள் பார்ப்பதற்காகவே
ப்ரெசென்ட் சார் என்று
சொல்லாமல்
இருந்த நாட்கள் எத்தனை
அந்த
மறக்கமுடியாத நாட்கள் எத்தனை...
------------------------------------------------
எதாவது பேசலாம்
என்று
அருகில் செல்லும்போது
எதுவும் பேசாமல்
மெதுவாக
நகர்ந்த நாட்கள் எத்தனை
அந்த
மறக்கமுடியாத நாட்கள் எத்தனை..
------------------------------------------------

February 23, 2009

உங்கள் காதலின் அளவை அறிந்து கொள்ள ...


இன்று காதலர் தினம். உலகமே காதல் நினைவுகளில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. புதிதாக காதலைச் சொல்பவர்கள் முதல் மனைவியுடன் காதலர் தினத்தைக் கொண்டாடுபவர்கள் வரை எல்லோரும் ஆனந்தக் கடலில் மூழ்கும் நாள் இன்று.இன்று மாலை நேரமானதும் கடற்கரை, பூங்கா, கோயில், திரையரங்கு என எல்லாமுமே காதலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.காதலைக் கொண்டாட ஒரு தினம் வேண்டுமா? இது காதலர்களுக்கு மட்டும்தான், இது மேற்கத்திய நடைமுறை நமக்கெதற்கு என்று காதலர் தினத்திற்கு எத்தனையோ எதிர்ப்புகள் உண்டு.இவையெல்லாம் வெறும் பசப்பல்கள்தான். உண்மையில் எல்லாவற்றிற்கும் ஒரு நாள் வேண்டும்தான். தினமும் சூரியன் உதிக்கத்தான் செய்கிறது, தமிழர் திருநாள் பொங்கல் அன்று மட்டும் சூரியனை நாம் கொண்டாடவில்லையா? அதற்கென்ன சூரியன் நம்மிடம் கோபித்தாக் கொள்கிறது?காதலர்களுக்கு மட்டும்தான் காதலர் தினம் என்பது எந்த வகையில் நியாயம்? திருமணமானவர்கள் அவர்களது துணையை காதலிப்பதில்லையா? அதுவும் காதல்தான். அவர்களுடனும் இந்த காதலர் தினத்தைக் கொண்டாடலாமே?இது மேற்கத்திய கலாச்சாரம் என்பது முற்றிலும் தவறு, நமது முந்தைய காலத்திலும் இந்திர விழா, மன்மத விழா, வில் விழா என்றெல்லாம் பல பெயர்களில் இந்த காதலர் தினம் கொண்டாடப்பட்டுள்ளதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. எனவே நமது கலாச்சாரத்தைக் கொண்டாடுங்களேன்.நீங்கள் விரும்பும் அல்லது காதலிக்கும் உங்கள் துணையை அது காதலர்/காதலியாகவோ அல்லது கணவன்/மனைவியாகவோக் கூட இருக்கலாம். அவர்களுடன் கொண்டாடுங்கள் காதலர் தினத்தை எந்த எதிர்மறையான கருத்தும் இன்றி. என்ன தயாராகிவிட்டீர்களா காதலர் தினத்திற்கு... அதற்கு முன் இந்த காதல் பரிசோதனையில் பங்கேற்பீர். இதில் நீங்கள் பெற விரும்பும் முத்தம், நீங்களும் உங்கள் துணையும் கொண்டிருக்கும் நெருக்கம், இவற்றிற்கெல்லாம் மேலாக உங்கள் காதலின் அளவைக் கூறும் லவ்மீட்டர் என அடுக்கி வைத்துள்ளது .இதனைப் பார்த்து உங்கள் காதலின் அளவை அறிந்து கொள்ளுங்கள். வாவ் என்று வாய்பிளக்கும் அளவிற்கு மதிப்பெண் வந்தால் உங்கள் காதலிக்கோ அல்லது காதலருக்கோ கூறி மகிழுங்கள். பாராட்டையும் பெறுங்கள்.இல்லையென்றால் பரவாயில்லை. தாமதிக்காதீர் அடுத்த ஆண்டுக்குள் காதல் அளவில் சதமடிக்கும் எண்ணத்துடன் கிளம்புங்கள் காதல் கொண்டாட்டத்தில் பங்கேற்க.
காதலர் தின வாழ்த்துகள்!
பின் குறிப்பு :
இதை நான் எழுதவில்லை .நான் படித்ததை உங்களுடன் பகிந்துகொள்கிறேன் .

February 22, 2009

பிரிவையும் நேசிக்கிறேன்



பிரிவையும் நேசிக்கிறேன்
-----------------------------------------------
தனிமையில் இருந்தால் சந்தோசமாக
இருக்கலாம் என்பார்கள் சிலர்..

ஒருபோதும்
ஏற்றுக்கொள்ளமுடியாது என்னால்.
----------------------------------------------
சொல்ல நினைக்கின்றேன்

சொல்ல நினைத்தாலும்

கேட்பதற்கு யாருமில்லாமல்
புதைந்து கொள்ளும்
என் சோக வரிகள் இதோ..

---------------------------------------------
டிக்
டிக் என்று
ஓயாமல்
ஓடிக்கொண்டே
இருக்கும்
என்
வீட்டு சுவர்கடிகரம்
அறையின்
ஓய்வில்லா
மின்விசிறி எழுப்பும் சத்தில்
ஒரு அதியசியத்தை கண்டேன் ....
கண்டது கனவுதான்
----------------------------------
கண்ணாடி
எதிரில் நிற்கும் பிம்பத்தை
மட்டுமே காட்டும்
என்று யார் சொன்னது?
என் வீட்டு கண்ணாடி முன்
நான் நின்றால் அது
உன்னை காட்டுகிறதே

---------------------------------

இப்போதெல்லாம்
பார்க்கவே முடிவதில்லை
என்றாலும்..
கண்மூடி திறக்கும்
நேரத்திற்குள் உன் பிம்பங்களை
கண்ணாடி போல
தெளிவாக கட்டிவிடுகிறது
என் காதல்.

--------------------------------------

----------------------------------------

இன்னும்
எத்தனை
நாட்களுக்குத்தான்
நான்
எனது கைபேசிக்கு
நானே
முத்தம் கொடுத்துக்கொண்டு
இருப்பேனோ...

---------------------------------------

உனக்கும்
எனக்கும் இடையே
இருக்கும்

பல ஆயிரக்கணக்கான
கிலோமீடர்
தூர இடைவெளி
சட்டென்று குறைகிறது
தொலைபேசியில்

நீ
தந்த முத்தத்தால்...
---------------------------------------
உன்

ஒவ்வொரு முதத்திர்க்கும்
ஒரு
முத்து தராலாம்
தந்திருந்தால்

இந்நேரம்
உன் வீடே
நிறைந்துருக்கும்
ஆனால்

என் உயிர் தொட்ட
அந்த
முத்தத்திற்கு
என்ன தரலாம்...


------------------------------
-----------

February 10, 2009

Tamil see

ரசிகன்பாலு-இயற்கை காதலன்



January 19, 2009

A Way To Reach SUCCESS











STARS are not born... they are made.

A way to reach success..

வெற்றி என்பது ஒருபோதும் மந்திரமாக இருக்க முடியாது, எமது வாழ்வில் நல்ல பல பண்புகளை தொடர்ச்சியாகக் கடைப்பிடித்து வரும்போது, எம்மோடு வெற்றி வந்து கைகுலுக்கும். இதேபோலத்தான், ஒரே தவறுகளை தொடர்ச்சியாகச் செய்து வருகையில், எம்மோடு தோல்விகள் தோழமை கொள்கின்றன.

ஆக வெற்றி அடைவதென்பது மிகவும் எளிமையான காரியம் தான். ஏனெனில், உண்மைகள் எப்போதும் மிகவும் எளிமையானதாகவே இருக்கும். ஆனாலும் வெற்றி பெறுவது இலகுவான காரியமாக இல்லாவிட்டாலும், எளிமையான காரியமே!

ஆக, Success என்பது பற்றி அறிந்தோம். இந்த வெற்றியை எவ்வாறு வரையறுப்பது? என்ற கேள்வியும் இந்த நேரத்தில் எழுகின்றது தானே!

ஆக, வெற்றி பெறுவது நிச்சயம் என்று முடிவெடுத்து விட்டோம். இனி நாம் வெல்வோம். இருந்தும் வெற்றி பெறுவதற்கு தடையாகும் சில விடயங்களும் உண்டென்றே சொல்ல வேண்டும். கொஞ்சமாய் அவற்றை பட்டியற்படுத்துகிறேன். வாசித்து புரிந்து கொள்ளுங்கள்.

1. தன்னம்பிக்கையின்மை
2. தோற்றுவிடுவோம் என்ற பயம்
3. திட்டமிடாமை
4. தெளிவான இலக்கு இல்லாமை
5. தாமதிக்கச் செய்தல்
6. குடும்பச் சுமை
7. பொருளாதாரக் கஷ்டங்கள்
8. இலக்குகளை வேறு விடயங்களுக்காக விட்டுக் கொடுத்தல்
9. அதிகமானவற்றை தனிமையாகச் செய்தல்
10. அதீத ஆர்வம்
11. குறைவான ஆர்வம்
12. பூரணமற்ற பயிற்சி
13. முன்னுரிமை வழங்காமை

ஆக, மேலேயுள்ள விடயங்களை எமக்குள் வராமல் தடுப்பது மிகவும் கடினமான காரியமே அல்ல. “மனமுண்டானால் இடமுண்டு” என சும்மாவா சொன்னார்கள்?

வெற்றிகளைக் குவிக்கும் ஆளுமைகளாக நாம் மாறிவிட இன்றே முடிவெடுப்போம். அதை நன்றே செயற்படுத்துவோம். வெற்றி இனி எம் பக்கம் தான்.

என் அம்மா அடிக்கடி எனிடம் சொன்னது நினைவுக்கு வருகிறது

“என் மகனே, உன் வாழ்வு சிறக்க வேண்டின்
எப்போதும் தெய்வ பக்தி இருக்க வேண்டும்.
மூத்தோர்கள் யாவரிடமும் பணிவு காட்டி
முறையோடு பேசுவதில் கனிவு வேண்டும்.

அத்துடன் கையில களவும், வாயில பொய்யும்

இல்லாம இருந்தா ஒருவன் எங்கு இருந்தாலும்

அவனுக்கு வெற்றி தான்.