AddThis

Bookmark and Share

January 19, 2009

A Way To Reach SUCCESS











STARS are not born... they are made.

A way to reach success..

வெற்றி என்பது ஒருபோதும் மந்திரமாக இருக்க முடியாது, எமது வாழ்வில் நல்ல பல பண்புகளை தொடர்ச்சியாகக் கடைப்பிடித்து வரும்போது, எம்மோடு வெற்றி வந்து கைகுலுக்கும். இதேபோலத்தான், ஒரே தவறுகளை தொடர்ச்சியாகச் செய்து வருகையில், எம்மோடு தோல்விகள் தோழமை கொள்கின்றன.

ஆக வெற்றி அடைவதென்பது மிகவும் எளிமையான காரியம் தான். ஏனெனில், உண்மைகள் எப்போதும் மிகவும் எளிமையானதாகவே இருக்கும். ஆனாலும் வெற்றி பெறுவது இலகுவான காரியமாக இல்லாவிட்டாலும், எளிமையான காரியமே!

ஆக, Success என்பது பற்றி அறிந்தோம். இந்த வெற்றியை எவ்வாறு வரையறுப்பது? என்ற கேள்வியும் இந்த நேரத்தில் எழுகின்றது தானே!

ஆக, வெற்றி பெறுவது நிச்சயம் என்று முடிவெடுத்து விட்டோம். இனி நாம் வெல்வோம். இருந்தும் வெற்றி பெறுவதற்கு தடையாகும் சில விடயங்களும் உண்டென்றே சொல்ல வேண்டும். கொஞ்சமாய் அவற்றை பட்டியற்படுத்துகிறேன். வாசித்து புரிந்து கொள்ளுங்கள்.

1. தன்னம்பிக்கையின்மை
2. தோற்றுவிடுவோம் என்ற பயம்
3. திட்டமிடாமை
4. தெளிவான இலக்கு இல்லாமை
5. தாமதிக்கச் செய்தல்
6. குடும்பச் சுமை
7. பொருளாதாரக் கஷ்டங்கள்
8. இலக்குகளை வேறு விடயங்களுக்காக விட்டுக் கொடுத்தல்
9. அதிகமானவற்றை தனிமையாகச் செய்தல்
10. அதீத ஆர்வம்
11. குறைவான ஆர்வம்
12. பூரணமற்ற பயிற்சி
13. முன்னுரிமை வழங்காமை

ஆக, மேலேயுள்ள விடயங்களை எமக்குள் வராமல் தடுப்பது மிகவும் கடினமான காரியமே அல்ல. “மனமுண்டானால் இடமுண்டு” என சும்மாவா சொன்னார்கள்?

வெற்றிகளைக் குவிக்கும் ஆளுமைகளாக நாம் மாறிவிட இன்றே முடிவெடுப்போம். அதை நன்றே செயற்படுத்துவோம். வெற்றி இனி எம் பக்கம் தான்.

என் அம்மா அடிக்கடி எனிடம் சொன்னது நினைவுக்கு வருகிறது

“என் மகனே, உன் வாழ்வு சிறக்க வேண்டின்
எப்போதும் தெய்வ பக்தி இருக்க வேண்டும்.
மூத்தோர்கள் யாவரிடமும் பணிவு காட்டி
முறையோடு பேசுவதில் கனிவு வேண்டும்.

அத்துடன் கையில களவும், வாயில பொய்யும்

இல்லாம இருந்தா ஒருவன் எங்கு இருந்தாலும்

அவனுக்கு வெற்றி தான்.

January 13, 2009

பொங்கல் நல் வாழ்த்துக்கள்.....

புகைப்படம் சிங்கபூர் சிவ-கிருஷ்ணா ஆலயத்தில் பொங்கல் வைக்கும் போது .....

தமிழுணர்வுப் பொங்கல்..!
******************************
ஸர்வதாரி- தை மாதம் முதல் தினம், இன்று பொங்கல் திருநாள்.
இது இந்துக்கள் பண்டிகை, கிறிஸ்தவர்கள் பண்டிகை அல்லது முஸ்லிம் பண்டிகை என்று சொல்லாமல் தமிழர் திருநாள் என்கிறோம்.

உழவர்கள் "சேற்றில்" கை வைத்தால்தான் நாம் "சோற்றில்" கை வைக்க முடியும்.

நஞ்செய், புஞ்செய் நிலங்களானாலும் சரி, வானம் பார்த்து மழைக்குக் கதறும் பூமியானாலும் சரி, இராப்பகலாக உழைத்து உழைப்பின் செல்வம் அறுவடைக்கு வருகிற நாள் "தை" யில்தான்! .
உழைப்பை அறுவடை செய்து செல்வம் வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் பலன் பெறக் காரணமாக இருந்த நிலம், நீர், காற்று, சூரியன், கால்நடைகளுக்கு நன்றிப் பெருக்கோடு எடுக்கும் விழாதான் பொங்கல் பெருவிழா! .தை மாதம் கொண்டாடப்படுவதால் "தைத் திருநாள்" என்றும் அழைக்கிறோம்.
இடது நம்ம திருவிழா
--------------------------
உழுது, நாற்று நட்டு, களை எடுத்து, உரமிட்டு, நீர் பாய்ச்சி, கண்ணின் கருமணி போல பாதுகாக்கின்ற உழவனின் இந்தக் காலங்களில் மடியில் காசு இருக்காது. அறுவடை முடிந்தால்தான் அவன் மடியும் கனக்கும்; மனமும் நிறைந்திருக்கும். அதனால்தான் மகன், மகள் திருமணம் அல்லது சீர்செனத்தியோடு புத்தாடைகள் வாங்குவதையே உழவன் ஒத்திப் போட்டுக் கொள்வது வழக்கம்.

"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற பழமொழியே இதனால் ஏற்பட்டதுதானே!

பொங்கலோ பொங்கல் !!!!!

*******************************
மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுவது போகிப் பொங்கல். "பழையன கழிதலும் புதியன புகுதலும் "இந்நாளில்தான்! .பீடைகள் ஒழிக்கப்பட்டு மங்கல வாழ்வுதனை மகிழ்ச்சியோடு துவங்கும் நன்நாள்தான் போகித் திருநாள். மொத்தத்தில் உறைவிடம் நிறைவிடமாகக் காட்சி தரும்.மழைக்கு அதிபதியான வருணன் தனது வெப்பவீச்சுக் கதிர்களால் பூமியிலிருந்து ஒரு பங்கு நீரை எடுத்துக் கொண்டு பதிலாக பத்து மடங்கு மழையாகப் பொழிகிறான். அதேபோல சூரியனைப் பூஜிப்பதால் வாழ்க்கைக்கு தேவையான எல்லாம் பத்து மடங்காகக் கிடைக்கும் என்பது தொன்று தொட்டு வரும் தகர்க்க இயலாத நம்பிக்கையாகும்.
"பரிதியே பொருள் யாவிற்கும் முதலே" என்கிற முறுக்கு மீசைகாரக் கவிஞன் பாரதியின் கதிரவன் வணக்கப் பாடலில் குறிப்பிடுவது போன்று கதிரவனை முதன்மைப்படுத்தி வணங்குதல் கடைப்பிடிக்கப் படுகிறது. எனவே சூரியக் கடவுள் அந்த வருட விளைச்சலுக்குத் துணை புரிந்தமைக்கு நன்றி கூறியும், எதிர்வரும் ஆண்டில் நல்ல விளைச்சலைத் தர வேண்டியும் பொங்கலன்று முதல் வணக்கம் சூரியனுக்குச் செய்வார்கள்.


மாட்டு பொங்கல், நம் நாட்டு பொங்கல்...

`````````````````````````````````````````````````````````````````

உழவுக் கருவிகளை அது டிராக்டராக இருந்தாலும் சரி, கலப்பையாக இருந்தாலும் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் மோட்டார் பம்பு செட் உட்பட அனைத்துக் கருவிகளையும் இதே போல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். பொங்கல் பொங்கும் போது "பொங்கலோ பொங்கல் மாட்டுப் பொங்கல்" என்று எல்லோரும் குரல் கொடுக்க சிறுவர்கள் சந்தோஷித்து குதூகலிப்பார்கள். தொடர்ந்து சாமி கும்பிட்டு கற்பூர தீபாராதனை காட்டப்படும். அதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் பிரசாதத்தை கொடுப்பார்கள். இப்படி கால் நடைகளுக்கு நன்றி கூறும் நாளைத்தான் " மாட்டுப் பொங்கலாக க் கொண்டாடுகின்றனர்.

ஜல்லிக்கட்டு ஒரு சுன்டக்க விளையாட்டு

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
சண்டித்தனம் செய்யும் காளைகளின் கொட்டத்தை அடக்கி வெற்றி வாகை சூடுபவர்களுக்கு பரிசுகள் பண முடிப்புகள் வழங்கப்படும். தமிழகத்தில் மதுரை,வாடிப்பட்டி,அலங்காநல்லூர்,அறந்தாங்கி, கம்பம், புதுக்கோட்டை, இராமநாதபுரம்,காங்கேயம், கம்பம்,தஞ்சை,போன்ற இடங்களிலிருந்து லாரிகள் மூலமாக கொண்டு வருவார்கள். இத்தகைய காளைகள் விவசாயத்திற்கோ மற்ற வேலைகளுக்கோ பயன்படுத்தாமல் ஜல்லிக்கட்டுக்காகவே வளர்ப்பார்கள். இது தமிழகத்தில் மிகப் பழமையான வீர விளையாட்டாகும். மன்னர்கள் ஆண்ட காலத்தில் கிராமங்களில் ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர்களையே பெண்கள் மணந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கிறது. (ஆனால் இப்போது மாப்பிள்ளை ஜல்லிக்கட்டுக்கு போறார்னு தெரிஞ்சா, இந்த இடம் நம்ம புள்ளைக்கு ஒத்து வராது என்று ஒதுங்கி விடுவார்கள். மாடு முட்டி குடல் சரிஞ்சு செத்துப் போனா மக வாழாவெட்டியாப் போயிருவாள் என்று மகளைப் பெற்ற மகராசர்கள் சிந்தனைதான் காரணம் ) , அப்பறம் கிழக்குசீமை படத்துல மாதிரி சாவக்கட்டு நடக்கும்.இப்ப எங்க அதெல்லாம் நடக்குது......


உறவும் நட்பும் ஒன்றுகூடுவோம் !

உவகைகொண்டு பண்பாடுவோம் !!

இல்லமெங்கும் ஒளி ஏற்றிடுவோம் !!!

இனிய பொங்கல் கொண்டாடுவோம் !!!!


தமிழர்கள் மற்றும் அனைவருக்கும் என் வலை பூ முலமாக பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்..



Posted using ShareThis

January 03, 2009

சிந்தனை வரிகள்

************************************************************************************

************************************************************************************

************************************************************************************
************************************************************************************

எனது இனிய நண்பர் சென்னையை சேர்ந்த வெங்கட் அவர்களின் சிந்தனை வரிகளை இங்கே வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இதேபோல் உங்களுடைய கவிதைகள், சிந்தனை கருத்துக்கள் போன்றவற்றை பின்வரும் மின்னாஞ்சளுக்கு rasiganbalu@gmail.com , அனுப்பவும். அனைத்து வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றி..........